தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு காலனி நுழைவுவாயில் பகுதியில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) ஏடிஎம் அருகே அண்மையில் பெய்த மழையால் அதிகளவில் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதையடுத்து, தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்றும் வகையில், பைப் அமைத்து மழைநீர் வடிகாலுடன் இணைத்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தேங்கிய மழைநீர் அதிரடியாக வெளியேற்றப்பட்டது.

பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு, 3-வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.