Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு: தூத்துக்குடியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

Admin 19 hours ago தூத்துக்குடி
மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
தூத்துக்குடி, நவ.28:

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்ததை வரவேற்று, தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது தொடர்பாக நடைபெற்று வரும் சட்டப் போராட்டத்தில், உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை வரவேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.1795850992_1005587458.jpg

இதற்காக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே திரண்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள், உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்று பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை மீது மகா தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்கவும், தீப தரிசனம் செய்யவும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து வாகனங்களில் திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

நிர்வாகிகள் பங்கேற்பு:

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏ.எம். ராஜேஷ், கனல், ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் இசக்கிமுத்து, சண்முகசுந்தரம், சிவராமன், காளிராஜா, மாசாணம், நவமணிகண்டன், சரஸ்வதி, மாவட்டச் செயலாளர் செல்வி மற்றும் மண்டல் தலைவர்கள் சண்முகசுந்தரம், லிங்கசெல்வம், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஓ.பி.சி. மாநிலச் செயலாளர் பாலமுருகன், அணிப்பிரிவு மாவட்டத் தலைவர்கள் வெள்ளத்தாய், சக்திவேல், ஜெயக்குமார், ஓம்பிரபு மற்றும் இசக்கிதுரை, வன்னியராஜ், ஐயப்பன், ஜெயரூபி, லட்சுமி, வேல்கனிக்கொறையாரா, சி.எம். மாரியப்பன், கேசவன், சுதா, குருமூர்த்தி, சொக்கலிங்கம் உள்ளிட்ட பல்வேறு அணி மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்று தூத்துக்குடியில் பாஜகவினர் நடத்திய இந்தக் கொண்டாட்டம் அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்

ஹவுசிங் போர்டு காலனி நுழைவுவாயிலில் தேங்கிய மழைநீர் அதிரடியாக வெளியேற்றம் – மேயர் ஜெகன் பெரியசாமிக்கு கவுன்சிலர் ரெங்கசாமி மற்றும் பொதுமக்கள் நன்றி!

13 hours ago

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மகா தீபம் ஏற்றம்! – நீதியரசர்கள் வைத்தியநாதன், பார்த்திபன் முன்னிலையில் விண்ணைப் பிளந்த வெற்றிவேல் வீரவேல் முழக்கம்!

14 hours ago

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் - அதிகாரிகளைத் தொலைபேசியில் அழைத்து உத்தரவிட்ட அரசியல் புள்ளிகள் யார்? – தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

22 hours ago

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு நீதி கிடைக்க வேண்டும்! – தவெக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

1 day ago

தூத்துக்குடி சிவன் கோயில் தேரைச் சுற்றி டிஜிட்டல் பேனர்கள்! – அகற்றாவிட்டால் நாளை இந்து முன்னணி போராட்டம்!!

1 day ago

கடைசியாக ஒருவழியாக கைது நடந்துவிட்டது; வேற்றுக்கிரகவாசிகள் வருவார்கள் என்றுதான் நினைத்தேன்!” – எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது பற்றி கனிமொழி எம்.பி. கிண்டல்

1 day ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்