Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடி சிவன் கோயில் தேரைச் சுற்றி டிஜிட்டல் பேனர்கள்! – அகற்றாவிட்டால் நாளை இந்து முன்னணி போராட்டம்!!

Admin 11 hours ago தூத்துக்குடி
டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படாவிட்டால், நாளை (நவ.28) காலை இந்து முன்னணி சார்பில் டிஜிட்டல் போர்டுகளை அகற்றும் போராட்டம் - ராகவேந்திரா
தூத்துக்குடி, நவ.27:

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிவன் கோயில் ரத வீதியில் அமைந்துள்ள தேரடியில், கோயில் தேரைச் சுற்றிலும் அதிக அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதற்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உடனடியாக டிஜிட்டல் பேனர்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். ராகவேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி சிவன் கோயில் ரத வீதியில் உள்ள தேரடியில், தேர் கொட்டகையைச் சுற்றிலும் அதிக அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோயில் தேர் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, தேரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தேரைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும்.

இவ்வளவு அதிகமான டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.1795794901_1005585062.jpg

எனவே, மாநகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல் உடனடியாகத் தலையிட்டு டிஜிட்டல் பேனர்களை அகற்றி, கோயில் தேரைப் பாதுகாக்க வேண்டும்.

டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படாவிட்டால், நாளை (நவ.28) காலை இந்து முன்னணி சார்பில் டிஜிட்டல் போர்டுகளை அகற்றும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு நீதி கிடைக்க வேண்டும்! – தவெக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

10 hours ago

கடைசியாக ஒருவழியாக கைது நடந்துவிட்டது; வேற்றுக்கிரகவாசிகள் வருவார்கள் என்றுதான் நினைத்தேன்!” – எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது பற்றி கனிமொழி எம்.பி. கிண்டல்

13 hours ago

ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார்: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது! – விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையில் போலீசார் நடவடிக்கை!

13 hours ago

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு! – அண்ணாமலை கடும் விமர்சனம்!

15 hours ago

நாளை CRPF பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

16 hours ago

தூத்துக்குடியில் நாளை காங்கிரஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மாநாடு -மாநகர் மாவட்டத் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் அழைப்பு! – மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு!

20 hours ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்