Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு நீதி கிடைக்க வேண்டும்! – தவெக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

Admin 10 hours ago தூத்துக்குடி
பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் மேடைகளில் பேசுவது மட்டுமே போதாது. - அண்ணாமலை
சென்னை, நவ.27:

பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், இந்த வழக்கில் அரசியல் தலையீடு இல்லாமல் நேர்மையான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் எந்தவிதமான அரசியல் தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெறுவதையும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு உரிய நீதி கிடைப்பதையும் தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்.

வழக்குப் பதிவு செய்து கைது செய்வதற்கான அனைத்து முகாந்திரங்களும் இருந்தபோதிலும், இந்தச் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகி பல நாட்களுக்குப் பிறகும், நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பின்னரே காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் தவறான முன்னுதாரணமாகும்.

பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் மேடைகளில் பேசுவது மட்டுமே போதாது. ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.

எனவே, இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி சிவன் கோயில் தேரைச் சுற்றி டிஜிட்டல் பேனர்கள்! – அகற்றாவிட்டால் நாளை இந்து முன்னணி போராட்டம்!!

11 hours ago

கடைசியாக ஒருவழியாக கைது நடந்துவிட்டது; வேற்றுக்கிரகவாசிகள் வருவார்கள் என்றுதான் நினைத்தேன்!” – எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது பற்றி கனிமொழி எம்.பி. கிண்டல்

13 hours ago

ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார்: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது! – விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையில் போலீசார் நடவடிக்கை!

13 hours ago

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு! – அண்ணாமலை கடும் விமர்சனம்!

15 hours ago

நாளை CRPF பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

16 hours ago

தூத்துக்குடியில் நாளை காங்கிரஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மாநாடு -மாநகர் மாவட்டத் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் அழைப்பு! – மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு!

20 hours ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்