Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் நாளை காங்கிரஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மாநாடு -மாநகர் மாவட்டத் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் அழைப்பு! – மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு!

Admin 24 minutes ago தூத்துக்குடி
3,000 கட்சிக் கொடிகள், 200-க்கும் மேற்பட்ட வரவேற்பு பேனர்கள்; பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம்!
தூத்துக்குடி, நவ.27:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கட்சி மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாநாடு நாளை (நவ.28) தூத்துக்குடியில் நடைபெறுகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய மாநாடு நடைபெற உள்ளதால், இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி அபிராமி மஹாலில் நாளை காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், மாநில மறுசீரமைப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர்கள் தனுஷ்கோடி ஆதித்தன், தங்கபாலு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

**3,000 கட்சிக் கொடிகள் – 200-க்கும் மேற்பட்ட வரவேற்பு பேனர்கள்!**

மாநாட்டை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்துடன் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் மாநாடு நடைபெறும் அபிராமி மஹால் வரையிலான பகுதிகளில் சுமார் 3,000 காங்கிரஸ் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 200-க்கும் மேற்பட்ட வரவேற்பு டிஜிட்டல் பேனர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில், மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் மாநாட்டில் பங்கேற்க வரும் காங்கிரஸ் முன்னணித் தலைவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

**முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை!**

மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து தென்மண்டல காங்கிரஸ் மறுசீரமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவராமன், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் எஸ்.எம். சகாயராஜ், வடக்கு மாவட்டத் தலைவர் க. பெருமாள்சாமி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத் துணைத் தலைவர் சங்கர், ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜாராம் பாண்டியன், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் லாரன்ஸ், நாகர்கோவில் மாநகர் தலைவர் ராபின்சன், சிவபிரபு மற்றும் மாவட்டப் பார்வையாளர்கள் முத்தழகன், பூவை ஜேம்ஸ், பஞ்சாட்சரம் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் ராஜ், காங்கிரஸ் என்.ஜி.ஓ. மாநில ஒருங்கிணைப்பாளர் புல்லட் ராஜதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடனும் ஆலோசிக்கப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

**பல மாவட்டங்களில் இருந்து காங்கிரசார் பங்கேற்பு!**

இந்த மாநாட்டில் தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமின்றி, தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டங்கள், ராமநாதபுரம் மாவட்டம், கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்டங்கள், நாகர்கோவில் மாநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பெருந்திரளாகப் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மாநாட்டைச் சிறப்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய மாநாடு நடைபெற உள்ளதால், மாநகர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

மில்லர்புரத்தில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்த தனியார் நிறுவனம் பூட்டி சீல் வைப்பு! – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

1 day ago

புகாரளிக்க வந்தவரையே சித்திரவதை செய்து கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடுகிறதா தவெக அரசு? – பாலகிருஷ்ணன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

1 day ago

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசைக் கண்டித்து தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு கண்டன ஆர்ப்பாட்டம்! – நீதித்துறையின் மாண்பைக் காக்க வலியுறுத்தி முழக்கம்

1 day ago

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் தவெக அரசு வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டது – முதல்வர் விஜய்யைச் சுற்றி மாயக்கோட்டை கட்டப்பட்டுள்ளதாக வீ த லீடர் இயக்கத் தலைவர் விமர்சனம்

2 days ago

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது பெண் மாவட்ட ஆட்சியர் புகார்? – “Inappropriate Advances, Unwarranted Messages” குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை! – அண்ணாமலை வலியுறுத்தல்

3 days ago

தூத்துக்குடியில் உப்பளங்களை அழிக்க எதிர்ப்பு; ஜான் பாண்டியனிடம் ஆதரவு கோரிய உற்பத்தியாளர்கள்

3 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்