Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

ஒட்டப்பிடாரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

Admin 1 day ago தூத்துக்குடி
தேர்தல் நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஒட்டப்பிடாரம், மார்ச் 1:

நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் புதியம்புத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரைஸ் மில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி சார்பில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ள ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் மு. அனுசியா (முதுகலை வணிகவியல், கல்வியியல்) பொறுப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து அடுத்த கட்ட தேர்தல் நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டம் தொடக்கத்தில் உறுதிமொழி ஏற்று, மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா.மு. தமிழ்நேயன், சு. அன்னலட்சுமி ஆகியோர் தலைமையிலும், மண்டல செயலாளர் இ. மாரிமுத்து முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது. மாநில பாசறை பொறுப்பாளர்கள் அந்தோணி பிச்சை, செ. பரதேசி, துரைசிங் செந்தில்குமார் உள்ளிட்டோர் அடுத்த கட்ட தேர்தல் பணிகள் குறித்து கருத்துகளை பகிர்ந்தனர்.

மாவட்ட பொறுப்பாளர்கள் முத்துகிருஷ்ணன், செல்லப்பா முருகன், சேரந்தை ராஜ், மாடசாமி, சுடலைமணி, சிவகுமார், முத்துக்குமார், கொலஞ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை முன்வைத்தனர்.

மாவட்டச் செயலாளர் தேவராஜ் நன்றியுரை நிகழ்த்த, கூட்டம் சிறப்பாக நிறைவடைந்தது.

மேலும் செய்திகள்

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை இருள் சூழ்ந்த காட்சி – தூத்துக்குடி மாநகராட்சி கவனிக்காதது ஏன்?

19 hours ago

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் வேரூன்றும் முதல்வர் மு. க .ஸ்டாலின் பிறந்தநாள் விழா - அமைச்சர் கீதா ஜீவன் தங்க மோதிரம் நலத்திட்ட உதவி வழங்கி உற்சாகம்.

1 day ago

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட - கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம், ஆசி பெற்று இளையராஜா விருப்ப மனு தாக்கல்.

1 day ago

முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாள்: பிரம்மாண்ட கேக் வெட்டி 500 பேருக்கு பிரியாணி வழங்கினார் - கவுன்சிலர் ரெங்கசாமி

1 day ago

சாலை, வடிகால் சீரமைக்காவிட்டால் போராட்டம் – கிழக்கு மண்டல பாஜக கடும் எச்சரிக்கை

2 days ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு - மகிளா நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

3 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்