ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா விருப்ப மனு தாக்கல் செய்தார்.
விருப்ப மனு வழங்குவதற்கு முன், திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மற்றும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைமையினரை சந்தித்து ஒன்றிய செயலாளர் இளையராஜா விருப்ப மனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.