Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை இருள் சூழ்ந்த காட்சி – தூத்துக்குடி மாநகராட்சி கவனிக்காதது ஏன்?

Admin 19 hours ago தூத்துக்குடி
8 மின் கம்பங்களில் விளக்குகள் எரியாத நிலை சரி செய்யுமா மாநகராட்சி?
தூத்துக்குடி, மார்ச் 2:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழூர் ரயில்வே நிலையம் செல்லும் சாலை மற்றும் ரோஜ் பூங்காவிலிருந்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் – தூத்துக்குடி மண்டல மையம் வரை உள்ள பகுதிகள் பல நாட்களாக இருள் சூழ்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடற்கரைச் சாலை, நகரிலிருந்து துறைமுகம், துறைமுக குடியிருப்பு மற்றும் அனல் மின்நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் முக்கியப் பாதையாகும். இந்தச் சாலை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை சேதமடைந்துள்ளதுடன், தெருவிளக்குகள் இயங்காததால் இரவு நேரங்களில் முழுக்க இருள் சூழ்ந்துள்ளது. குறிப்பாக அப்பகுதியில் உள்ள 8 மின் கம்பங்களில் விளக்குகள் எரியாத நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வாகன விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிலர் பைக் ரேஸ் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டும் சம்பவங்களும் நடைபெறுகின்றன என கூறப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு மருத்துவர் மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவமும் இதே பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல், கீழூர் ரயில்வே நிலைய நுழைவாயில் பகுதியில் இருந்து ராஜம் திருமண மண்டபம் வரை பல நாட்களாக தெருவிளக்குகள் எரியாமல் இருள் நிலவி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை மாநகராட்சிக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமும் இரவில் முத்துநகர் விரைவு ரயில் மூலம் சென்னை செல்லும் பயணிகள் அந்தச் சாலையை பயன்படுத்தி ரயில் நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்கள் தனியாக செல்ல முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் வேரூன்றும் முதல்வர் மு. க .ஸ்டாலின் பிறந்தநாள் விழா - அமைச்சர் கீதா ஜீவன் தங்க மோதிரம் நலத்திட்ட உதவி வழங்கி உற்சாகம்.

1 day ago

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட - கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம், ஆசி பெற்று இளையராஜா விருப்ப மனு தாக்கல்.

1 day ago

ஒட்டப்பிடாரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

1 day ago

முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாள்: பிரம்மாண்ட கேக் வெட்டி 500 பேருக்கு பிரியாணி வழங்கினார் - கவுன்சிலர் ரெங்கசாமி

1 day ago

சாலை, வடிகால் சீரமைக்காவிட்டால் போராட்டம் – கிழக்கு மண்டல பாஜக கடும் எச்சரிக்கை

2 days ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு - மகிளா நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

3 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்