திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட தொடர் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.
காலை 9 மணியளவில் பழைய பேருந்து நிலையம் அருகில் பிறந்தநாள் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து பிரம்மாண்ட கேக் வெட்டிக் பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து மதியம் சிறுவர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. மாலை 4 மணியளவில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த 14 பச்சிளம் குழந்தைகள் அமைச்சர் கீதா ஜீவன் தங்க மோதிரம் அணிவித்து ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி பெற்றோர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். குழந்தைகளின் நலனே அரசின் முதன்மை குறிக்கோள் என அவர் கூறினார்.

மாலை 6 மணியளவில் 43வது வட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் சரவணகுமார், மருத்துவர் அணி அருண்குமார் சுற்றுச் சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஷ் வரன் சிங் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவிகள் பொதுமக்கள் மத்தியில் வேரூன்றும் அளவில் நடைபெற்றது.