தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தென்பாகம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள அவரது முழு உருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெண் விடுதலை, சமூக நீதி உள்ளிட்ட கொள்கைகளுக்காக தந்தை பெரியார் ஆற்றிய பணிகளை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு முன்பு சமூகநீதி உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து திமுக இருவண்ணக் கொடி ஏற்றப்பட்டு, கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாளையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட திமுகவினர் திரளாக பங்கேற்றனர்.