Advertisement

Share On
District News

வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு தினம்: சென்னை காந்தி மண்டபத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை!

Admin 3 days ago தூத்துக்குடி
தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை, நவ.18:

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, நாட்டின் விடுதலைக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சிதம்பரனார் ஆற்றிய தியாகத்தையும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியர்களின் சுயமரியாதையையும் பொருளாதார சுதந்திரத்தையும் நிலைநாட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் தூத்துக்குடி மத்திய மாவட்ட தாவுக்கா இணை செயலாளர் கோல்டன், கிஷோர், திருச்சிற்றம்பலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

சாயர்புரம் அருகே பிளஸ்-1 மாணவி கொடூரக் கொலை: காதல் விவகாரத்தில் ஆத்திரம் – கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொன்ற இளைஞர்!

5 hours ago

வ.உ.சிதம்பரனார் 90-வது நினைவு தினம்: திருவுருவச் சிலைக்கு கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை!

3 days ago

கந்தசஷ்டி திருக்கல்யாணத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 4,000 பேருக்கு அன்னதானம்! தவெக நிர்வாகி திருச்சிற்றம்பலம் தொடங்கி வைத்தார்

5 days ago

கந்தசஷ்டி திருக்கல்யாணத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 4,000 பேருக்கு அன்னதானம்! தவெக நிர்வாகி திருச்சிற்றம்பலம் தொடங்கி வைத்தார்

5 days ago

ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்துவின் 157-வது பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை!

6 days ago

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முத்துநகர் கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்ற குழந்தைகள் தின விழா! – 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு; வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசு, சான்றிதழ் வழங்கிப் பாராட்டு!

6 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்