தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, தவெக நிர்வாகி திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில், திருக்கல்யாணத்திற்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 4,000 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அன்னதான நிகழ்ச்சியை திருச்சிற்றம்பலம் தொடங்கி வைத்து, பக்தர்களுக்கு உணவு வழங்கினார். திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு அருந்தினர்.

இந்நிகழ்ச்சியில் டி.ஏ. தெய்வநாயகம், தவெக நிர்வாகி டாக்டர் டைகர் சிவா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சி பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.