Advertisement

Share On
District News

ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்துவின் 157-வது பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை!

Admin 20 hours ago தூத்துக்குடி
முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி. கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி, நவ.15:

தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் அளப்பரிய பங்காற்றிய நகரத் தந்தையும், குடிநீர் தந்த கோமானுமான ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்துவின் 157-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி. கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.1794716013_1005533886.jpg

தூத்துக்குடி மாநகரின் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தவர் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து. நகரின் அடிப்படை வசதிகள் மற்றும் குறிப்பாக குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் அவர் ஆற்றிய தொண்டினை நினைவுகூரும் வகையில் அவரது பிறந்தநாளில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

மேலும், மாநகர, பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, மாநகர, பகுதி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்று ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்துவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மக்களின் நலனுக்காக அரும்பாடுபட்ட நகரத் தந்தையின் சேவைகளையும், தொண்டையும் நினைவுகூர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முத்துநகர் கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்ற குழந்தைகள் தின விழா! – 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு; வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசு, சான்றிதழ் வழங்கிப் பாராட்டு!

20 hours ago

தமிழக வில்வித்தை வீரர்களுக்கு தேசியப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பறிபோகும் அபாயம்! – தேர்வுப் போட்டிகளை நடத்தாமல் முடக்கி வைத்துள்ள பள்ளிக்கல்வித்துறை: உடனடியாக முதல்வர் தலையிட வேண்டும் – வீ த லீடர் இயக்கத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்!

1 day ago

தமிழக வில்வித்தை வீரர்களுக்கு தேசியப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பறிபோகும் அபாயம்! – தேர்வுப் போட்டிகளை நடத்தாமல் முடக்கி வைத்துள்ள பள்ளிக்கல்வித்துறை: உடனடியாக முதல்வர் தலையிட வேண்டும் – வீ த லீடர் இயக்கத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்!

1 day ago

சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு பகுதியில் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு: குடியிருப்பு வகைக்கு நிலம் பட்டா மாற்றம் செய்து வழங்கிய கனிமொழி எம்.பி.க்கு கவுன்சிலர் ஆர்.ரெங்கசாமி நன்றி!

1 week ago

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.451 கோடியாக உயர்வு! 42.09% வளர்ச்சி பதிவு – தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் தகவல்

2 weeks ago

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வு: தவெக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் திமுக மகளிர் அணி மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

2 weeks ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்