தூத்துக்குடி மாவட்டம், சங்கரப்பேரி கிராமம் 3-வது வார்டுக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் சர்வே எண்கள் 101, 102, 103, 104 மற்றும் 105/2 உள்ளிட்ட நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்களாகவும், குப்பை குவியல் என வகைப்படுத்தப்பட்டும் இருந்து வந்தன.
இந்த நிலங்களை குடியிருப்பு வகைக்கு மாற்றி, அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக, அரசாணை நிலை எண் 761-ன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிலங்கள் குடியிருப்பு வகைக்கு வகைமாற்றம் செய்யப்பட்டு பட்டா பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக தொடர்ந்து முயற்சி எடுத்து, அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு காண உதவிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதிக்கு, 3-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவருமான ஆர். ரெங்கசாமி தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்பு உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்காக கனிமொழி எம்.பி.க்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆர். ரெங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.