Advertisement

Share On
District News

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வு: தவெக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் திமுக மகளிர் அணி மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

Admin 3 hours ago தூத்துக்குடி
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மகளிர் அணியினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி, அக்.31:


தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதையும், கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி மற்றும் மின்சாரக் கட்டண உயர்வையும் கண்டித்து, தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படியும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதியின் வழிகாட்டுதலின்படியும், தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தலைமை வகித்தார்.1793428002_1005480282.jpg

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மகளிர் அணியினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கீதா ஜீவன் ஆவேசப் பேச்சு!

ஆர்ப்பாட்டத்தில் கீதா ஜீவன் பேசுகையில், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டினார். 500 பாலியல் வன்முறைச் சம்பவங்களில் தவெகவைச் சேர்ந்தவர்களே தொடர்புடையவர்கள் என்று குறிப்பிட்ட அவர், பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் 'சிங்கப் பெண் சிறப்புப் படை'யைத் தேடுவதற்கே இன்னொரு படையை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
1793428026_1005480192.jpg
பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறும் அரசு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாமா? பெண்களும், பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகளும் அச்சமின்றி நடமாட முடியாத சூழல் உருவாகியிருப்பது வேதனை அளிக்கிறது என அவர் தெரிவித்தார்.

மேலும், தூத்துக்குடியில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் ஆண்கள், பெண்கள், படித்த இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் கொலை செய்யப்பட்டு, 9 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். திமுக ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழல் நிலவவில்லை என்றும், தற்போதைய ஆட்சியில் மக்கள் நலப் பணிகளைவிட விளம்பரங்களுக்கும், ரீல்ஸ் எடுப்பதற்குமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் விமர்சித்தார்.1793428050_1005480199.jpg

விலைவாசி உயர்வால் தவிக்கும் ஏழை, நடுத்தர மக்கள்!

தொடர்ந்து பேசிய அவர், மின்சாரக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளதால் வீடுகள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருவதாகக் கூறினார்.

அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, என அனைத்தும் பொதுமக்களின் குடும்ப பட்ஜெட்டைப் பாதித்துள்ளன.

குறிப்பாக, தினக்கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள், நடுத்தரக் குடும்பத்தினர் மாத வருமானத்தில் பெரும்பகுதியை அத்தியாவசியத் தேவைகளுக்கே செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு, வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளும் அதிகரித்து வருவதால் குடும்பங்களை நடத்துவதற்கே பெண்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச்சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும், மின்சாரக் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா, ஒன்றியச் செயலாளர் ராமசாமி மற்றும் வடக்கு, தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
1793428074_1005480237.jpg
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.451 கோடியாக உயர்வு! 42.09% வளர்ச்சி பதிவு – தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் தகவல்

1 hour ago

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வு: தவெக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் திமுக மகளிர் அணி மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

3 hours ago

தூத்துக்குடியில் கல்விக் கடன் முகாம்: கனிமொழி ராஜாத்தி கருணாநிதி தொடங்கி வைத்தார்!

1 week ago

தூத்துக்குடியில் கல்விக் கடன் முகாம்: கனிமொழி ராஜாத்தி கருணாநிதி தொடங்கி வைத்தார்!

1 week ago

தூத்துக்குடியில் கல்விக் கடன் முகாம்: கனிமொழி ராஜாத்தி கருணாநிதி தொடங்கி வைத்தார்!

1 week ago

தூத்துக்குடியில் கல்விக் கடன் முகாம்: கனிமொழி ராஜாத்தி கருணாநிதி தொடங்கி வைத்தார்!

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்