Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

வேலவன் ஹைப்பர் மார்க்கெட் தங்க நகை கடை விவகாரம்: வணிகர் சங்க மாநிலத் தலைவர் விக்ரம் ராஜா நேரில் விசாரணை

Admin 18 hours ago தூத்துக்குடி
யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சட்டப்படி முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் - ஏ.எம்.விக்ரம் ராஜா

தூத்துக்குடி, செப்.24:


தூத்துக்குடியில் உள்ள வேலவன் ஹைப்பர் மார்க்கெட் தங்க நகை கடையில் ரூ.1 கோடி பணம் கேட்கப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்ரம் ராஜா நேரில் சென்று கடை மேலாளர் சரவணனிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து இவ்விவகாரம் குறித்து விளக்கமளித்தார்.

1790236173_1005340903.jpg
அப்போது அவர் கூறியதாவது:

“தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பைப் பொறுத்தவரை, சாதி, மதம் உள்ளிட்ட வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, வணிகர்கள் அனைவரையும் ஒரு தாய் பிள்ளைகளாகவே கருதுகிறோம். வணிகர்களுக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்களுக்கு பாதுகாப்பாக வணிகர் சங்கம் இருக்கும்.

இந்த விவகாரம் தொடர்பாக சிலர் சாதிய உணர்வுடன் சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இந்தப் பிரச்சினையை சாதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதை நண்பர்கள் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில், ஏதேனும் வணிக நிறுவனம் தவறு செய்திருந்தாலும், அதையும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தட்டிக் கேட்கும்.

எனவே, இந்த விவகாரத்தை வணிக நிறுவனம் தொடர்பான பிரச்சினையாக மட்டுமே பார்க்க வேண்டும். சாதி, மதம், மொழி, இனம் போன்றவற்றை இதில் கொண்டுவர வேண்டாம். மாநிலத்தில் எந்தப் பகுதியில் வணிகர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும், வணிகர் சங்க பேரமைப்பு நேரில் சென்று அவர்களுக்கு ஆதரவாக நிற்கும். அதன்படியே தூத்துக்குடிக்கும் இன்று வந்துள்ளேன்.

இந்த விவகாரத்தில் சாதியை வைத்து பிரச்சினையை திசைதிருப்பாமல், வணிகர்கள் என்ற நோக்கத்துடன் அனைவரும் செயல்பட வேண்டும்.

மேலும், முத்தூட் பைனான்ஸ் போன்ற அடமான நிறுவனங்கள் தொடர்பாகவும் பல்வேறு நபர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். நகைகளை அடகு வைப்பதில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன, வட்டி எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் கணக்கிடப்படும்.

அதேபோல், அடகு வைத்த நகைகளைத் திருப்பிச் செலுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு நிர்பந்தம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. இதுகுறித்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு, உண்மை நிலையை கண்டறிந்து, முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தும்.

யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சட்டப்படி முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல்: கோவிந்தபுரத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தீவிர பிரசாரம்

17 hours ago

தூத்துக்குடி மாநகராட்சியில் 100% கழிவு சேகரிப்பு, தரம் பிரித்தலுக்கு தீவிர நடவடிக்கை 60 வார்டுகளிலும் வீடு, வணிக நிறுவனங்களில் நேரடி ஆய்வு – விதிமீறல்களுக்கு அபராதம்

17 hours ago

தாராபுரம் இடைத்தேர்தல்: ஆலோசனைக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

1 day ago

ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: அண்ணாமலை

1 day ago

குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி நீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை! மோட்டார் பறிமுதல், குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

2 days ago

தவெக ஒன்றிய செயலாளர் மாற்றத்தால் அதிருப்தியா? ஆதரவாளர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடம்

2 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்