Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல்: கோவிந்தபுரத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தீவிர பிரசாரம்

Admin 17 hours ago தூத்துக்குடி
தாராபுரம் இடைத்தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தீவிர பிரச்சாரம்
தாராபுரம், செப்.24:

தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு, கோவிந்தபுரம் பகுதியில் திமுக சார்பில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு, திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1790240265_1005341305.jpg

கோவிந்தபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்ற மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து கழக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர். அப்போது பொதுமக்களிடம் தேர்தல் தொடர்பான கருத்துகளையும் கேட்டறிந்ததுடன், திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் எடுத்துரைத்து வாக்குகள் சேகரித்தனர்.
1790240278_1005341307.jpg
முன்னதாக, தேர்தல் பணிகள் குறித்து கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, வாக்குச்சாவடி வாரியாக மேற்கொள்ள வேண்டிய பிரசாரப் பணிகள், பொதுமக்களை சந்தித்தல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
1790240290_1005341306.jpg
இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா ,செந்தில்குமார், ராமசாமி, முன்னாள் அரசு வழக்கறிஞர் பூங்குமார், ஒன்றிய துணை செயலாளர் வேல்ராஜ், மாமன்ற உறுப்பினர் கனகராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கோபால், மாநகர விவசாய அணி முன்னாள் துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், ஒன்றிய விளையாட்டு அணி அமைப்பாளர் மதுபாலா மணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் 100% கழிவு சேகரிப்பு, தரம் பிரித்தலுக்கு தீவிர நடவடிக்கை 60 வார்டுகளிலும் வீடு, வணிக நிறுவனங்களில் நேரடி ஆய்வு – விதிமீறல்களுக்கு அபராதம்

17 hours ago

வேலவன் ஹைப்பர் மார்க்கெட் தங்க நகை கடை விவகாரம்: வணிகர் சங்க மாநிலத் தலைவர் விக்ரம் ராஜா நேரில் விசாரணை

18 hours ago

தாராபுரம் இடைத்தேர்தல்: ஆலோசனைக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

1 day ago

ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: அண்ணாமலை

1 day ago

குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி நீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை! மோட்டார் பறிமுதல், குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

2 days ago

தவெக ஒன்றிய செயலாளர் மாற்றத்தால் அதிருப்தியா? ஆதரவாளர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடம்

2 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்