Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி நீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை! மோட்டார் பறிமுதல், குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Admin 1 day ago தூத்துக்குடி
மின்மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரியங்கா,எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி, செப். 22–

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை சீராகப் பராமரிக்கும் வகையில், குடிநீர் குழாய் இணைப்புகளில் விதிமுறைகளுக்கு மாறாக மின்மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரியங்கா,எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்குத் தேவையான குடிநீர், மாநகரப் பகுதியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றுப் படுகையில் இருந்து நீர் உறிஞ்சு குழாய்கள் மூலம் எடுக்கப்படுகிறது. பின்னர் நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் வாயிலாக சுழற்சி அடிப்படையில் மாநகராட்சி பகுதிகளுக்கு சீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கடுமையான வெயில் நிலவி வரும் நிலையிலும், மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு முறையாகக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மாநகரின் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடுவதாகப் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட கள ஆய்வில், சில கட்டிட உரிமையாளர்கள் மாநகராட்சி குடிநீர் குழாய் இணைப்புகளில் விதிமுறைகளுக்கு மாறாக நேரடியாக மின்மோட்டார்கள் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் குழாய்களில் நீரின் அழுத்தம் குறைந்து, கடைசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு போதிய அளவில் குடிநீர் சென்றடையாத நிலை ஏற்படுவது தெரியவந்துள்ளது.

உடனடியாக மோட்டார்களை அகற்ற வேண்டும்

மாநகராட்சி குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின்மோட்டார்கள் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவது, குடிநீர் விநியோக உபவிதிகளுக்கு முற்றிலும் முரணானதாகும். எனவே, குடிநீர் குழாய் இணைப்புகளில் மின்மோட்டார்கள் பொருத்தியுள்ள கட்டிட உரிமையாளர்கள், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை மீறி தொடர்ந்து மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால், நடைமுறையில் உள்ள குடிநீர் விநியோக உபவிதிகள் மற்றும் தொடர்புடைய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி, விதிமுறைகளுக்கு மாறாக பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்புகள் உடனடியாகத் துண்டிக்கப்படும். மேலும், பெரும் அளவிலான அபராதம் விதிக்கப்படுவதோடு, தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சி குடிநீர் விநியோக விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து, அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா, இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல்: ஆலோசனைக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

12 hours ago

ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: அண்ணாமலை

13 hours ago

தவெக ஒன்றிய செயலாளர் மாற்றத்தால் அதிருப்தியா? ஆதரவாளர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடம்

1 day ago

ரூ.1 கோடி கேட்டு தூத்துக்குடி பிரபல வணிக நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்: பசும்பொன் மக்கள் கட்சித் தலைவர் இசக்கி ராஜா கைது

1 day ago

100 நாள் வேலை திட்ட பெண்களை அலுவலக கோப்புகளை தூக்க பயன்படுத்துவதா? பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

2 days ago

இரட்டைமலை சீனிவாசனார் 81-வது நினைவு தினம் தூத்துக்குடியில் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்

5 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்