Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

ரூ.1 கோடி கேட்டு தூத்துக்குடி பிரபல வணிக நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்: பசும்பொன் மக்கள் கட்சித் தலைவர் இசக்கி ராஜா கைது

Admin 1 day ago தூத்துக்குடி
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முற்றுகை; பாதுகாப்புக்கு போலீசார் குவிப்பு
தூத்துக்குடி, செப்.22: தூத்துக்குடியில் பிரபல வணிக நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் வழக்கில், பசும்பொன் மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் இசக்கி ராஜாவை தென்பாகம் போலீசார் கைது செய்தனர். அவரது கைதைக் கண்டித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் இசக்கி ராஜா (46). இவர் பசும்பொன் மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார், இன்று காலை அவரது வீட்டிற்குச் சென்று இசக்கி ராஜாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நகையில் உலோகம் கலப்பு என புகார்

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் பிரபல வேலவன் ஹைப்பர் மார்க்கெட்டில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட தங்க நகையில் உலோகம் அதிகளவில் கலந்திருப்பதாகக் கூறி, அந்த நகையை வாங்கிய நபர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நகையை வாங்கிய நபருக்கு ஆதரவாக இசக்கி ராஜா, வேலவன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, நகைக்காக ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் பெற்றுக்கொண்டதுடன், மேலும் ரூ.1 கோடி வழங்க வேண்டும் எனக் கேட்டு மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட வணிகர்கள் சங்கம் சார்பில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று இசக்கி ராஜா கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையம் முற்றுகை

இசக்கி ராஜா கைது செய்யப்பட்ட தகவல் பசும்பொன் மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தெரியவந்ததும், அவர்கள் திரளாக தென்பாகம் காவல் நிலையம் முன்பு திரண்டு வந்து முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல் நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் பூட்டப்பட்டது. மேலும், நுழைவுவாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொடர்ந்து, காவல் நிலையத்தைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி தென்பாகம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கைது செய்யப்பட்ட இசக்கி ராஜாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல்: ஆலோசனைக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

12 hours ago

ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: அண்ணாமலை

13 hours ago

குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி நீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை! மோட்டார் பறிமுதல், குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

1 day ago

தவெக ஒன்றிய செயலாளர் மாற்றத்தால் அதிருப்தியா? ஆதரவாளர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடம்

1 day ago

100 நாள் வேலை திட்ட பெண்களை அலுவலக கோப்புகளை தூக்க பயன்படுத்துவதா? பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

2 days ago

இரட்டைமலை சீனிவாசனார் 81-வது நினைவு தினம் தூத்துக்குடியில் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்

5 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்