Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தீர்ப்பைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது தவெக அரசு! – அண்ணாமலை விமர்சனம்

Admin 2 hours ago தூத்துக்குடி
நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு தயக்கம் காட்டுவது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் - அண்ணாமலை
சென்னை, நவ.23:

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தமிழக வெற்றிக் கழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திமுக அரசு பின்பற்றவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள தவெக அரசும் அந்தத் தீர்ப்பின் முழுமையான விவரங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபத்தூணுக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது வருத்தமளிக்கிறது என்றார்.

மேலும், நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு தயக்கம் காட்டுவது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலான சூழலை உருவாக்குவதாகவும், அரசு அதிகாரிகளே நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

தவெக நிர்வாகி டாக்டர் டைகர் சிவாவின் தந்தை சுப்பையா (எ) முருகன் சாலை விபத்தில் உயிரிழப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல்!

1 hour ago

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்ட பயிற்சி மாநாடு – அகில இந்தியப் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர், அமைச்சர்கள் பங்கேற்பு!

4 hours ago

ஒரே பெண்ணுக்கு டபுள் கல்யாணம்... டபுள் மாப்பிள்ளைகள் நேருக்கு நேர்! கோவில்பட்டியில் களேபரம்!

23 hours ago

சாயர்புரம் அருகே பிளஸ்-1 மாணவி கொடூரக் கொலை: பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை எனும் மோசமான சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது தரங்கெட்ட தவெக அரசு - கனிமொழி எம்.பி.

1 day ago

திமுக ஆட்சியின் அதே அணுகுமுறையை தவெக அரசும் தொடர்கிறது – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை சரமாரி விமர்சனம்!

2 days ago

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி: தூத்துக்குடியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்!

2 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்