Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

திமுக ஆட்சியின் அதே அணுகுமுறையை தவெக அரசும் தொடர்கிறது – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை சரமாரி விமர்சனம்!

Admin 7 hours ago தூத்துக்குடி
ஒரே தீபத்தூண் குறித்து இரு நீதிமன்றங்களில் முரண்பட்ட வாதங்கள் – அரசின் புரிதல் என்ன? எனக் கேள்வி?
சென்னை, நவ.20:

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் கடந்த திமுக ஆட்சி கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் பின்பற்றுவதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய திமுக ஆட்சியின்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூண் சமணத் துறவிகளால் விளக்கேற்றுவதற்காக அமைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டதாகவும், அதற்கு முன்பு அந்தத் தூண் நில அளவைக் கல் என்ற நிலைப்பாடு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், தற்போது தவெக ஆட்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில் அதே தூண் நில அளவைக் கல் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஒரே கட்டமைப்பு தொடர்பாக இரு நீதிமன்றங்களில் தமிழக அரசு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுப்பது எப்படி? அன்றைய திமுக அரசாக இருந்தாலும், இன்றைய தவெக அரசாக இருந்தாலும் இந்த விவகாரத்தில் அரசுக்கு ஏற்பட்டுள்ள புரிதல் குறைபாட்டையோ அல்லது திட்டமிட்டு தவறாகப் புரிந்துகொள்ளச் செய்யும் முயற்சியையோ இது வெளிப்படுத்துகிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மேலும், கடவுள் மறுப்பு என்ற பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக முந்தைய திமுக அரசு கையாண்ட அணுகுமுறையையே தற்போதைய தவெக அரசும் தொடர்வது ஏற்புடையதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, பக்தர்களின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, மேல்முறையீடுகள் மற்றும் நிர்வாகத் தாமதங்கள் மூலம் பிரச்சினையை நீட்டிக்கக் கூடாது என்பதே அண்ணாமலையின் வலியுறுத்தலாக உள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் திமுக அரசுக்கும் தவெக அரசுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்ற வகையில் அண்ணாமலை முன்வைத்துள்ள விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி: தூத்துக்குடியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்!

7 hours ago

தூத்துக்குடி மாநகரில் விதிமீறி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்: நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

11 hours ago

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை திருநாளன்று மட்டும் தீபம் ஏற்ற அனுமதி!

12 hours ago

காவிரி தொழில்நுட்பக் குழும துணைத் தலைவர் பதவி 5 மாதங்களாக காலி! தமிழக விவசாயிகளின் நீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய முக்கியப் பதவியை நிரப்பாதது ஏன்? – வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை கேள்வி!

2 days ago

காயல்பட்டினம் கடற்கரையில் கொத்துக்கொத்தாக கரை ஒதுங்கிய பேச்சாளை மீன்கள்! கடற்கரையில் மீன்கள் குவிந்ததால் பொதுமக்கள் ஆச்சரியம் – மீனவர்கள் கவலை!

2 days ago

தூத்துக்குடியில் கடைகள் முன்பு குப்பைகளை கொட்டியவர்களுக்கு அபராதம்! நான்கு வகையாகப் பிரித்து மாநகராட்சி வாகனத்தில் மட்டுமே வழங்க வேண்டும் – மாநகராட்சி எச்சரிக்கை!

2 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்