Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாநகரில் விதிமீறி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்: நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

Admin 11 hours ago தூத்துக்குடி
அனுமதியின்றி பேனர், விளம்பர பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை – மாநகராட்சி ஆணையர் பிரியங்கா எச்சரிக்கை!
தூத்துக்குடி: நவம்பர் 20

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக அமைக்கப்படும் தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அவ்வப்போது அகற்றி வருகின்றனர்.

குறிப்பாக, விதிமுறைகளை மீறி வைக்கப்படும் விளம்பரப் பதாகைகள், பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் உடனுக்குடன் அகற்றப்படுவதுடன், அவற்றை வைத்துள்ள தொடர்புடைய நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் மாநகரப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், விதிமுறைகளுக்கு முரணாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மாநகராட்சியின் அனுமதியின்றி விதிமுறைகளை மீறி விளம்பரப் பதாகைகள், பேனர்கள் அமைத்தல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மாநகராட்சியின் விதிமுறைகளைப் பின்பற்றி செயல்படுவதுடன், ஆக்கிரமிப்புகள் மற்றும் விளம்பரப் பலகைகள் தொடர்பாக மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

திமுக ஆட்சியின் அதே அணுகுமுறையை தவெக அரசும் தொடர்கிறது – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை சரமாரி விமர்சனம்!

7 hours ago

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி: தூத்துக்குடியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்!

7 hours ago

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை திருநாளன்று மட்டும் தீபம் ஏற்ற அனுமதி!

12 hours ago

காவிரி தொழில்நுட்பக் குழும துணைத் தலைவர் பதவி 5 மாதங்களாக காலி! தமிழக விவசாயிகளின் நீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய முக்கியப் பதவியை நிரப்பாதது ஏன்? – வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை கேள்வி!

2 days ago

காயல்பட்டினம் கடற்கரையில் கொத்துக்கொத்தாக கரை ஒதுங்கிய பேச்சாளை மீன்கள்! கடற்கரையில் மீன்கள் குவிந்ததால் பொதுமக்கள் ஆச்சரியம் – மீனவர்கள் கவலை!

2 days ago

தூத்துக்குடியில் கடைகள் முன்பு குப்பைகளை கொட்டியவர்களுக்கு அபராதம்! நான்கு வகையாகப் பிரித்து மாநகராட்சி வாகனத்தில் மட்டுமே வழங்க வேண்டும் – மாநகராட்சி எச்சரிக்கை!

2 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்