ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனையில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பழக்கடை, பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து வட்டாட்சியர் உத்தரவின் பேரில் அதிரடியாக அகற்றப்பட்டது. வட்டாட்சியரின் இந்த துரித நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பசுவந்தனை கைலாசநாதர் கோவில் அருகே பசுவந்தனையில் இருந்து கடம்பூர் செல்லும் நெடுஞ்சாலையோரத்தில், நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து திறந்தவெளியில் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். மேலும், அவ்வப்போது விபத்துகளும் நடைபெற்று வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன், வெயில் மற்றும் மழையில் பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பழங்களை பொதுமக்கள் வாங்கி உண்பதால், சுகாதாரப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.
எனவே, பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகவும், போக்
குவரத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் உள்ள இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் சமூகச் செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபு, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனாரிடம் மனு அளித்தார்.
குவரத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் உள்ள இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் சமூகச் செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபு, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனாரிடம் மனு அளித்தார்.இந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த வட்டாட்சியர் அய்யனார், மண்டல துணை வட்டாட்சியர் மரிய வியாகுல ஜெயா, வருவாய் ஆய்வாளர் நல்லதம்பி, கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, நில அளவைத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அளவீடு செய்தனர். நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தற்காலிக பழக்கடையை உடனடியாக அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அங்கிருந்த தற்காலிக பழக்கடை அகற்றப்பட்டது.
இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமம் நீங்கியுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றிய ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.