Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

எல்ஜி பெருங்காயத்தூள் விற்பனைக்கு தடை நீக்கப்பட்டதா? தூத்துக்குடி மளிகைக் கடைகளில் மீண்டும் விற்பனை – உணவு பாதுகாப்புத்துறை விளக்கம் அளிக்குமா?

Admin 18 hours ago தூத்துக்குடி
தடை உத்தரவு அமலில் இருக்கும்போது எல்ஜி பெருங்காயத்தூள் விற்பனை செய்யப்படுகிறதா அல்லது பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டு மீண்டும் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா
தூத்துக்குடி, அக்.5:

எல்ஜி நிறுவனத்தின் பெருங்காயத்தூள் தரம் தொடர்பான பிரச்னை காரணமாக விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தூத்துக்குடி மாநகரில் பல்வேறு மளிகைக் கடைகளில் எல்ஜி பெருங்காயத்தூள் மீண்டும் விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சார்பில், எவரெஸ்ட் மற்றும் லால்ஜி கோதூ அண்ட் கம்பெனி (LG) நிறுவனங்களின் சில பெருங்காயத்தூள் தயாரிப்புகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி அவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

குறிப்பாக, பெருங்காயத்தில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச ஆல்கஹால் கரையக்கூடிய சாறு (alcohol-soluble extract) அளவு 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை செய்யப்பட்ட சில மாதிரிகளில் அதைவிட குறைவான அளவு இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, தடை உத்தரவு அமலில் இருக்கும்போது எல்ஜி பெருங்காயத்தூள் விற்பனை செய்யப்படுகிறதா அல்லது பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டு மீண்டும் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தூத்துக்குடியில் தற்போது பல மளிகைக் கடைகளில் எல்ஜி பெருங்காயத்தூள் விற்பனை செய்யப்படுவதால், “இந்தப் பொருளுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுவிட்டதா? தடை நீக்கப்பட்டிருந்தால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன? தற்போது விற்பனை செய்யப்படும் பொருட்களை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தலாமா?” என்ற குழப்பம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

மேலும், கடைகளில் விற்பனை செய்யப்படும் எல்ஜி பெருங்காயத்தூள் தடை அறிவிப்புக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய இருப்பா அல்லது தரப் பரிசோதனைக்குப் பிறகு புதிதாக அனுமதிக்கப்பட்ட தயாரிப்புகளா என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

எனவே, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய விளக்கம் அளித்து, தற்போது எல்ஜி பெருங்காயத்தூளை விற்பனை செய்யவும், பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தவும் அனுமதி உள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தடை உத்தரவு, அதன் தற்போதைய நிலை மற்றும் தூத்துக்குடியில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட தயாரிப்புகளின் பாதுகாப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டால் மட்டுமே பொதுமக்களின் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி உப்பளங்களை பாதுகாக்க தொடர் போராட்டம் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணியிடம் உப்பு உற்பத்தியாளர்கள் மனு

20 hours ago

தூத்துக்குடி மணல்மேடு பாத்திமா நகர் பரிசுத்த பாத்திமா அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

2 days ago

தாராபுரம் இடைத்தேர்தல் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை - பொதுக்கூட்டத் திடலுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள் வருகை

3 days ago

தூத்துக்குடியில் பெண்கள் சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

3 days ago

அக்டோபர் 02 காந்தியடிகள் பிறந்தநாள் காமராஜர் நினைவு நாள் - தூத்துக்குடி வடக்கு திமுக சார்பில் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

3 days ago

தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டில் இடிந்து விழும் நிலையில் பழைய தண்ணீர் தொட்டி: அகற்றப்படுமா?

3 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்