Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

அக்டோபர் 02 காந்தியடிகள் பிறந்தநாள் காமராஜர் நினைவு நாள் - தூத்துக்குடி வடக்கு திமுக சார்பில் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

Admin 1 day ago தூத்துக்குடி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி, அக்.2: 

அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்த தினமான காந்தி ஜெயந்தி மற்றும் சர்வதேச அகிம்சை தினம், பெருந்தலைவர் காமராஜரின் 51-வது நினைவு தினம் ஆகியவற்றையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் காந்தியடிகள் மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1790923417_1005370990.jpg
தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, வ.உ.சி. மார்க்கெட் முன்பு அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் கிழக்கு மண்டலத் தலைவர் கலைச்செல்வி, திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, செல்வராஜ், மருத்துவர் அணி அருண்குமார், மாமன்ற உறுப்பினர் சரவணகுமார், வழக்கறிஞர் ரூபராஜா, பொன்ராஜ், மகளிர் அணி கவிதா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி மணல்மேடு பாத்திமா நகர் பரிசுத்த பாத்திமா அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

21 hours ago

தாராபுரம் இடைத்தேர்தல் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை - பொதுக்கூட்டத் திடலுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள் வருகை

1 day ago

தூத்துக்குடியில் பெண்கள் சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

1 day ago

தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டில் இடிந்து விழும் நிலையில் பழைய தண்ணீர் தொட்டி: அகற்றப்படுமா?

1 day ago

தூத்துக்குடியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மோட்டார் தொழிலாளர் சங்க நகரக் கிளை - ஸ்ரீவை சுரேஷ் தேவர் தொடங்கி வைத்தார்.

3 days ago

முதலமைச்சர் விஜய் பிரசாரத்தால் நாள் முழுவதும் போக்குவரத்து மாற்றமா? – அண்ணாமலை கண்டனம்

4 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்