Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மணல்மேடு பாத்திமா நகர் பரிசுத்த பாத்திமா அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Admin 21 hours ago தூத்துக்குடி
திருப்பலிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்திரு. ரவி பாலன் அடிகளார் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி, அக்.3:

தூத்துக்குடி மணல்மேடு என அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் பாத்திமா நகரில் கொலுவீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பரிசுத்த பாத்திமா அன்னை ஆலயத்தின் பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று (அக்.3) தொடங்கியது.1791000805_1005375096.jpg
1791001105_1005375048.jpg
இதையொட்டி, சனிக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்ற திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்திரு. ரவி பாலன் அடிகளார் தலைமை தாங்கினார். அருட்தந்தை ஜெய்கர் அடிகளார் கலந்து கொண்டு, இறைமக்களுக்காக சிறப்பு வேண்டுதல்களை செய்தார்.

தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்பு திருப்பலிகள், ஜெப வழிபாடுகள் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக வரும் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது.1791000857_1005375048.jpg

இதனைத் தொடர்ந்து, அக்.12-ம் தேதி திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற உள்ளது.

13-ம் தேதி பெருவிழா

பாத்திமா அன்னை ஆலயத்தின் பெருவிழா வரும் 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. பெருவிழா திருப்பலிக்கு மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை தலைமை தாங்க உள்ளார்.
1791000912_1005375186.jpg
பெருவிழாவையொட்டி ஆலயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பெருவிழா திருப்பலியில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்க உள்ளனர்.

தொடர்ந்து, அன்று மாலை 5.30 மணிக்கு நகர் வீதிகளில் பரிசுத்த பாத்திமா அன்னையின் சப்பரபவனி நடைபெற உள்ளது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளும் பரிசுத்த பாத்திமா அன்னை முக்கிய வீதிகள் வழியாக பவனி வரும் நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அன்னையின் அருளைப் பெற உள்ளனர்.

சிறப்பான ஏற்பாடுகள்

திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணி சார்லஸ் அடிகளார் முன்னின்று நடத்தி வருகிறார். அவருக்கு மண்ணின் மைந்தரான அருட்சகோதரர் செல்வா இணைந்து தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

மேலும், திருவிழா ஏற்பாடுகளில் பங்குத்தந்தையுடன் இணைந்து திரு இருதய அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், ஊர்நலக் கமிட்டியினர் மற்றும் பங்கு இறைமக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. ஜெரி, அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், ஊர்நலக் குழுவினர் மற்றும் பங்கு இறைமக்கள் இணைந்து விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பெருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்கள் திருப்பலி மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

பரிசுத்த பாத்திமா அன்னையின் பெருவிழாவில் அனைவரும் பங்கேற்று அன்னையின் ஆசீரைப் பெறுமாறு பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணி சார்லஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

பெருவிழாவை முன்னிட்டு மணல்மேடு மற்றும் பாத்திமாநகர் பகுதிகளில் ஆன்மிக உற்சாகம் நிலவி வருகிறது. அன்னையின் திருவிழாவைக் காணவும், சிறப்பு திருப்பலியில் பங்கேற்று அருளாசி பெறவும் வரும் பக்தர்கள் அனைவரையும் பங்கு இறைமக்கள் சார்பில் அன்புடன் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை - பொதுக்கூட்டத் திடலுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள் வருகை

1 day ago

தூத்துக்குடியில் பெண்கள் சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

1 day ago

அக்டோபர் 02 காந்தியடிகள் பிறந்தநாள் காமராஜர் நினைவு நாள் - தூத்துக்குடி வடக்கு திமுக சார்பில் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

1 day ago

தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டில் இடிந்து விழும் நிலையில் பழைய தண்ணீர் தொட்டி: அகற்றப்படுமா?

1 day ago

தூத்துக்குடியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மோட்டார் தொழிலாளர் சங்க நகரக் கிளை - ஸ்ரீவை சுரேஷ் தேவர் தொடங்கி வைத்தார்.

3 days ago

முதலமைச்சர் விஜய் பிரசாரத்தால் நாள் முழுவதும் போக்குவரத்து மாற்றமா? – அண்ணாமலை கண்டனம்

4 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்