Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

14 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி! அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு

Admin 12 hours ago தூத்துக்குடி
கணவரிடமிருந்து பிரிந்து தனித்தனிப் பாதையில் பயணிக்க இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் முடிவு - டெய்சி மார்டின்
சென்னை, நவ.16:

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், அவரது மனைவியும் தொழிலதிபருமான டெய்சி மார்ட்டினும் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக டெய்சி மார்ட்டின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவரிடமிருந்து பிரிந்து தனித்தனிப் பாதையில் பயணிக்க இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2012-ல் நடைபெற்ற திருமணம்!

பிரபல தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த லீமா ரோஸ் தம்பதியின் மகள் டெய்சி மார்ட்டின். ஆதவ் அர்ஜுனாவுக்கும் டெய்சி மார்ட்டினுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக குடும்ப வாழ்க்கையில் இணைந்து பயணித்து வந்த இருவரும் தற்போது திருமண உறவிலிருந்து விலகி, தனித்தனியாக வாழ முடிவு செய்துள்ளனர்.

டெய்சி மார்ட்டின் வெளியிட்ட உருக்கமான அறிக்கை!

இதுகுறித்து டெய்சி மார்ட்டின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 14 ஆண்டுகளாக நாங்கள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் இணைந்து பயணித்து வந்துள்ளோம். அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த இந்தப் பயணத்தில் நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணைவர்களாகவும், பெற்றோர்களாகவும் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளோம்.

தற்போது ஆதவ் அர்ஜுனாவும் நானும் கணவன், மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து, தனித்தனிப் பாதைகளில் பயணிப்பது எனப் பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம்.

இது எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும். இருப்பினும், எங்கள் குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சி மற்றும் நலனை உறுதி செய்வதிலும் தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம்.

ஆதவ் அர்ஜுனா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் மகிழ்ச்சி, மன அமைதி மற்றும் வெற்றி கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்.

வாழ்க்கையின் இந்த மாற்றமான காலகட்டத்தில் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும், தனியுரிமைக்கும் மதிப்பளித்து, அனைவரும் புரிதலுடனும் கனிவுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என டெய்சி மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம்!

14 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர இருவரும் முடிவு செய்திருந்தாலும், தங்களது குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருப்பதாக டெய்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கணவன், மனைவி என்ற உறவில் பிரிந்தாலும், பெற்றோர் என்ற பொறுப்பை இருவரும் தொடர்ந்து இணைந்து மேற்கொள்ள உள்ளனர். குழந்தையின் மகிழ்ச்சி, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வே தங்களது முதன்மையான முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யார் இந்த டெய்சி மார்ட்டின்?

டெய்சி மார்ட்டின் பிரபல தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகள். அவரது தாயார் லீமா ரோஸ் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

டெய்சி மார்ட்டின் தொழில்துறையிலும் தனக்கென அடையாளத்தை உருவாக்கியுள்ளார். ஏரீஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். நிதி மற்றும் முதலீட்டுத் துறைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழகத்தில் ஆளும் தவெக அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா பொறுப்பு வகித்து வரும் நிலையில், அவரது குடும்ப வாழ்க்கை தொடர்பான இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

கடந்த சில காலமாக ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்த புகைப்படங்களை டெய்சி மார்ட்டின் சமூக வலைதளங்களில் பகிர்வதைத் தவிர்த்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இருவரும் பிரிவதற்கான குறிப்பிட்ட காரணம் குறித்து டெய்சி மார்ட்டின் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதனால் பிரிவுக்கான காரணம் குறித்து வெளியாகும் ஊகங்களை உறுதிப்படுத்த முடியவில்லை.

மேலும், இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்களே தவிர, சட்டப்பூர்வ விவாகரத்து நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதா அல்லது நிறைவடைந்ததா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

14 ஆண்டுகால இல்லற வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் தனித்தனிப் பாதையில் பயணிக்க எடுத்துள்ள இந்த முடிவு தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

மேலும் செய்திகள்

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்வு! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு – 23,979 குடும்பங்கள் பயன்பெறும்!

13 hours ago

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் அரசியல் தலையீடா? கோவில் பாரம்பரியத்தைச் சீர்குலைத்த தமிழக அரசுக்கு பா.ஜ.க. மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம்!

14 hours ago

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் முதல்வர், அமைச்சருக்கு அரோகரா கோஷம்: இதுவரை இல்லாத புதிய கலாச்சாரத்தை தவெக அரசு உருவாக்கியுள்ளது – முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!

15 hours ago

முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்: சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பு – மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வருடன் பேசுவாரா? அண்ணாமலை கேள்வி..

15 hours ago

கந்தசஷ்டி திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று மாலை தூத்துக்குடியில் பக்தர்களுக்கு விருந்து! தவெக நிர்வாகி திருச்சிற்றம்பலம், ஏற்பாடு!

17 hours ago

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் அரசியல் தலைவர்களின் பெயரில் ‘அரோகரா’ முழக்கம்: இந்து சமய மரபுகளை அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவதா? – வீ த லீடர் இயக்கத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்!

19 hours ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்