Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் முதல்வர், அமைச்சருக்கு அரோகரா கோஷம்: இதுவரை இல்லாத புதிய கலாச்சாரத்தை தவெக அரசு உருவாக்கியுள்ளது – முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!

Admin 15 hours ago தூத்துக்குடி
சூரசம்ஹார விழாவின் இறுதி நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களின் பெயர்களை இணைத்து அரோகரா முழக்கம் எழுப்பியது வேதனை அளிக்கிறது. - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்
சென்னை, நவ.16:

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அரோகரா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என முழக்கமிட்ட சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியில், இதுவரை இல்லாத வகையில் தமிழக முதலமைச்சருக்கு அரோகரா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என முழக்கமிட்டுள்ளனர். இதுபோன்ற முழக்கங்கள் திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் எழுப்பப்பட்டதாக இதுவரை வரலாறே கிடையாது.

இந்தப் புதிய கலாச்சாரத்தை தவெக அரசு உருவாக்கியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த நிகழ்வை ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட பலரும் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர்.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா என்பது சாதாரண நிகழ்ச்சி அல்ல. முருகப்பெருமானின் மீது கொண்ட பக்தியால் ஏழை, எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் ஒரு வார காலம் விரதம் இருந்து, தங்களது உடல், மனதைத் தூய்மைப்படுத்தி, கடுமையான ஆன்மிகக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர்.

ஆலயத்தின் ஒவ்வொரு தூணிலும் பக்தர்கள் தங்களது பக்தியையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் விரதம் இருந்து வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இத்தகைய பாரம்பரியமும், ஆன்மிகப் பெருமையும் கொண்ட சூரசம்ஹார விழாவின் இறுதி நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களின் பெயர்களை இணைத்து அரோகரா முழக்கம் எழுப்பியது வேதனை அளிக்கிறது.

முருகப்பெருமானுக்கு இணையாக அரசியல் தலைவர்களையும் முன்னிறுத்தி, இறைவனுக்கு எழுப்பப்படும் அரோகரா முழக்கத்தை முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் பெயர்களுடன் இணைத்திருப்பது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மிக நிகழ்ச்சிகள் என்பது அரசியல் விளம்பரத்திற்கான மேடைகள் அல்ல. பல தலைமுறைகளாக பக்தர்கள் கடைப்பிடித்து வரும் வழிபாட்டு மரபுகளையும், ஆன்மிக உணர்வுகளையும் மதிக்க வேண்டும். திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் கண்டனத்திற்குரியது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

14 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி! அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு

12 hours ago

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்வு! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு – 23,979 குடும்பங்கள் பயன்பெறும்!

13 hours ago

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் அரசியல் தலையீடா? கோவில் பாரம்பரியத்தைச் சீர்குலைத்த தமிழக அரசுக்கு பா.ஜ.க. மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம்!

14 hours ago

முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்: சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பு – மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வருடன் பேசுவாரா? அண்ணாமலை கேள்வி..

15 hours ago

கந்தசஷ்டி திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று மாலை தூத்துக்குடியில் பக்தர்களுக்கு விருந்து! தவெக நிர்வாகி திருச்சிற்றம்பலம், ஏற்பாடு!

17 hours ago

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் அரசியல் தலைவர்களின் பெயரில் ‘அரோகரா’ முழக்கம்: இந்து சமய மரபுகளை அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவதா? – வீ த லீடர் இயக்கத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்!

19 hours ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்