Advertisement

Share On
District News

அரசியலமைப்பு தினம்: அம்பேத்கர் சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை! – அரசியலமைப்பின் உயரிய கொள்கைகளைப் பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்பு!

Admin 9 hours ago தூத்துக்குடி
இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் ஜனநாயக மாண்புகளைப் பாதுகாப்பதுடன், அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மதித்து, ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய அடிப்படைக் கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றுவோம் என்றும் உறுதியேற்கப்பட்டது.
தூத்துக்குடி, நவ.26:

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், தென்பாகம் காவல் நிலையம் முன்பாக அமைந்துள்ள சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு, இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பையும், அவரது சமூகநீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பின் மீது முழுமையான நம்பிக்கையும் மதிப்பும் கொண்டு, அதன் அடிப்படை நோக்கங்களையும் உயரிய கொள்கைகளையும் போற்றி பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும், இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் ஜனநாயக மாண்புகளைப் பாதுகாப்பதுடன், அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மதித்து, ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய அடிப்படைக் கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றுவோம் என்றும் உறுதியேற்கப்பட்டது.

அதேபோல், அரசியலமைப்பின் முகப்புரையில் வலியுறுத்தப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய கொள்கைகளை வாழ்வில் கடைப்பிடித்து, அனைத்து இந்தியர்களிடையேயும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்க்க பாடுபடுவோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஏ.எம். ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகசுந்தரம், மாசாணம், இசக்கிமுத்து, காளிராஜா, தங்கம், மாவட்டச் செயலாளர் செல்வி, மண்டல் தலைவர்கள் லிங்கசெல்வம், சண்முகசுந்தரம் மற்றும் அணி, பிரிவு தலைவர்கள் ஜெயக்குமார், பாலாஜி, வெள்ளத்தாய், ஞானபிரகாசம், ஓம் பிரபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

வெள்ளை ரோஸ் கிளப் நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கம்! – ஆவணங்களுடன் பதிலளிக்கத் தயார்; வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என வேண்டுகோள்!

1 day ago

சாயர்புரம் அருகே பிளஸ்-1 மாணவி கொடூரக் கொலை: காதல் விவகாரத்தில் ஆத்திரம் – கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொன்ற இளைஞர்!

4 days ago

வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு தினம்: சென்னை காந்தி மண்டபத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை!

1 week ago

வ.உ.சிதம்பரனார் 90-வது நினைவு தினம்: திருவுருவச் சிலைக்கு கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை!

1 week ago

கந்தசஷ்டி திருக்கல்யாணத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 4,000 பேருக்கு அன்னதானம்! தவெக நிர்வாகி திருச்சிற்றம்பலம் தொடங்கி வைத்தார்

1 week ago

கந்தசஷ்டி திருக்கல்யாணத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 4,000 பேருக்கு அன்னதானம்! தவெக நிர்வாகி திருச்சிற்றம்பலம் தொடங்கி வைத்தார்

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்