Advertisement

Share On
District News

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்துக்கு எதிராக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் பங்கேற்பு

Admin 7 hours ago தூத்துக்குடி
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் A.S. லாரன்ஸ் பாண்டியன் தலைமை வகித்தார்

தூத்துக்குடி, செப்.21–


தூத்துக்குடி பகுதியில் தென்கொரியாவைச் சேர்ந்த HD Hyundai நிறுவனத்தின் கப்பல் கட்டுமான தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை வி.வி.டி. சிக்னல் பகுதியில் நடைபெற்றது.1790001632_1005330166.jpg

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் A.S. லாரன்ஸ் பாண்டியன் தலைமை வகித்தார். இதில் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கப்பல் கட்டுமான தளத்துக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.1790001668_1005330121.jpg

ஆர்ப்பாட்டத்தில், “தமிழக அரசே, தென்கொரிய HD Hyundai கப்பல் கட்டுமான தளத் திட்டத்தை தடை செய்”, “கப்பல் கட்டும் திட்டத்தை கைவிடு”, “உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடு” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், தற்போது ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கப்பல் கட்டுமானத் திட்டத்தை தூத்துக்குடிக்கு வரவிட மாட்டோம் என கூறியதாகவும், தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த நிலைப்பாட்டை மறந்துவிட்டதா? என்றும் ஆர்ப்பாட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக முன்பு தெரிவிக்கப்பட்ட நிலைப்பாட்டை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.1790001695_1005330099.jpg

தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆண்டுகளாக உப்பு உற்பத்தித் தொழில் நடைபெற்று வருவதாகவும், இதனை நம்பி உப்பு உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

கோவளம், பசுவந்தனை, பொட்டல்காடு, புல்லாவழி, முள்ளக்காடு, முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்கள் பாதிக்கப்படும் வகையில் கப்பல் கட்டுமானத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும், உப்பளங்களையும் அவற்றை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தூத்துக்குடியின் பாரம்பரிய உப்பு உற்பத்தித் தொழிலை பாதுகாத்து, உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், கப்பல் கட்டுமானத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்:
 கே. செல்வம், பி. சேகர், N. முத்துப்பாண்டி, சோழன், பாயு, முத்துக்கேல்வம், கங்காதர திலகர், K.K.R. காளிராக், சுரேஷ் காத்தி, மதுரை பாலாஜி, துரைப்பாண்டி, மாளிமுத்து, காமராக, பெருமாள் தேவர், கணபதி யாதவ், சகிம், கிருஷ்ணன், எட்வின் துரை, சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் ரூ.4.22 லட்சம் பெற்றுக்கொண்டு நகையை தர மறுப்பு: எஸ்.பி.யிடம் வணிகர் சங்கம் புகார் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நகைகளை பரிசோதித்ததில் குறைபாடு இல்லை என தகவல்

14 hours ago

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு நாம் இந்தியர் கட்சி ஆதரவு “திமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தவெக செயல்படுகிறது” – என் பி ராஜா

4 days ago

தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள்: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை

4 days ago

தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அலங்கார சேவைகள் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள்

5 days ago

.1 கோடியில் சீரமைக்கப்பட்ட ஊரணி திறக்கப்படாமலேயே தூர்ந்து போன அவலம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலையின் வீ த லீடர் இயக்கம் கோரிக்கை

6 days ago

பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்த நாள் தூத்துக்குடியில் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை

6 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்