Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடி சிவன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு 154 பால் குட பவனி! – சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கல்!

Admin 16 hours ago தூத்துக்குடி
கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு 154 பால் குடங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தூத்துக்குடி: நவம்பர் 15

தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, ஓம் அருள்மிகு ஸ்வர்ண ஆகர்ஷண காலபைரவர் திருக்கோவில் பக்தர்கள் மற்றும் அன்பே சிவம் அறக்கட்டளை சார்பில் நான்காம் ஆண்டு 154 பால் குட பவனி நடைபெற்றது.

இதையொட்டி, காலை 8 மணிக்கு தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் உள்ள சுந்தரபாண்டி விநாயகர் கோவிலில் இருந்து பால் குட பவனி தொடங்கியது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால் குடங்களை ஏந்தி, சிவன் கோவிலின் ரத வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று கோவிலை வந்தடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு 154 பால் குடங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

விழாவையொட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோவில் அறங்காவலர்கள் கந்தசாமி, ஆறுமுகம் ஆகியோர் அன்னப்பிரசாதம் வழங்கினர்.1794730539_1005534959.jpg

நான்காம் ஆண்டு நடைபெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா ஏற்பாட்டாளர் முத்து சிவம் செய்திருந்தார். மாதாஜி அமுதா சுவாமிகள், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராகவேந்திரா, மகாராஜன், முருகேசன், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
1794730550_1005534960.jpg
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த 154 பால் குட பவனியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டனர்

மேலும் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரிய வழிபாட்டு உரிமையை முடக்கக்கூடாது! – உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: வீ த லீடர் இயக்கத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்!

16 hours ago

பசுவந்தனையில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்! பொதுமக்கள் புகார் மீது வட்டாட்சியர் அய்யனார் அதிரடி நடவடிக்கை – தற்காலிக பழக்கடை அகற்றம்!

1 day ago

தூத்துக்குடி சிவன் கோயில் நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி திடீர் சஸ்பெண்ட்! பல்வேறு புகார்கள், முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை – இணை ஆணையர் ரோஜாலி சுமதா உத்தரவு!

1 day ago

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. விவகாரம் மறைந்த புகழ்பெற்ற கேலிச்சித்திரக் கலைஞர் ஆர்.கே. லட்சுமணன் வரைந்த கேலிச்சித்திரம் ஒன்று நினைவுக்கு வருகிறது - வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை

3 days ago

தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க வக்கில்லை; தட்டிக்கேட்டால் தாக்குதலா? பொதுமகனைத் தாக்கிய துணை சபாநாயகர்! முதல்வர் விஜய் மௌனம் கலைப்பாரா? – கீதாஜீவன் ஆவேசம்!

5 days ago

தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டு தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கிய தவெக மத்திய மாவட்ட நிர்வாகி திருச்சிற்றம்பலம்

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்