Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

“மக்கள் நலத் திட்டங்கள் தொடர மீண்டும் இந்த ஆட்சி தேவை” – அமைச்சர் கீதா ஜீவன்

Admin 5 days ago தூத்துக்குடி
அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியை வெற்றிப்பெறச் செய்ய வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடி, மார்ச் 25:

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதி 3வது தெரு சந்திப்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் தலைமையேற்று உரையாற்றினார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகி ஏ.பி.சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், 

தொடர்ந்து அமைச்சர் பேசியபோது, கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசு கல்வி, தொழில் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், இளைஞர் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார். “நான் முதல்வன்” போன்ற திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் கூறினார்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்றும், வியாபாரிகள் சுதந்திரமாக தொழில் செய்யும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முந்தைய ஆட்சியில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அரசு அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். விவசாயம், கல்வி, மருத்துவம், இளைஞர் தொழில் தொடக்கம் மற்றும் பெண்கள் சுயநிறைவு ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் விளக்கினார்.

இறுதியாக, மக்கள் நலத் திட்டங்கள் தொடர வேண்டுமெனில் மீண்டும் இந்த ஆட்சி அமைய வேண்டும் என்றும், அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியை வெற்றிப்பெறச் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் அழைப்பு விடுத்தார்.

கூட்டத்தில் காங்கிரஸ், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

சமத்துவ மக்கள் கழகம் தனித்து போட்டி ; தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

3 hours ago

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சி த செல்லப்பாண்டியன் வெற்றி பெற ஒன்றுபட்ட கூட்டணி!

5 hours ago

அனுபவம் களத்தில் மீண்டும்: தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளராக சி.த. செல்லப்பாண்டியன் அறிவிப்பு

2 days ago

ஜெயலலிதா காலத்தில் வளர்ந்த அரசியல் முகம் – சி.த. செல்லப்பாண்டியன்; 2026 தேர்தலில் மீண்டும் களம் காண்கிறார்.

2 days ago

பேரிடர் நேர சேவையை விமர்சிப்பது மனிதநேயத்திற்கே எதிரானது - பொய் பிரச்சாரம் செய்யும் திமுக கண்டனம் தெரிவித்த பாஜக

4 days ago

“மக்கள் நலத் திட்டங்கள் தொடர மீண்டும் இந்த ஆட்சி தேவை” – அமைச்சர் கீதா ஜீவன்

5 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்