தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர்,வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமையிலும், கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆறுமுக நயினார், தலைமை கழக பேச்சாளர் எஸ்.டி. கருணாநிதி, வர்த்தக அணி துணைச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பாஜக சசிகலா புஷ்பா, விவேகம் ரமேஷ், ஏ.எம். ராஜேஷ், அமமுக ஜானியல் நவஜீவன் பெரியசாமி, தமகா எஸ்.டி.ஆர். விஜய் சீலன், பாமக லட்சுமணன், தமமுக லாரன்ஸ், புரட்சி பாரதம் மாரி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அத்துடன் அதிமுக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட மற்றும் பகுதி செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலை கழகத்தினரும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற ஒருங்கிணைந்த முறையில் பணியாற்றுவது, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பு மேற்கொள்வது, கூட்டணிக் கட்சிகள் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.