தூத்துக்குடி தொடக்கத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்து, பின்னர் தி.மு.க – அ.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகள் மாறிமாறி வெற்றி பெறும் அரசியல் களமாக மாறியுள்ளது.
நேர்காணலில் கடும் எச்சரிக்கை;
மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக தலைமை கண்டனம்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான அதிமுக விருப்ப மனுதாரர்கள் நேர்காணல், சென்னை அதிமுக தலைமையகத்தில், பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த நேர்காணலின் போது,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் மற்றும்
வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ ஆகியோரிடம்,
“தூத்துக்குடி தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது” எனக் கூறி,
கட்சிப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து,
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் புதிய முகத்தை களம் இறக்க அதிமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
புதிய முகம்’ களமா?
அதிமுக வேட்பாளராக சுதாகர் பெயர் முன்னிலை;
இந்த புதிய முகம் பட்டியலில், சுதாகர் பெயர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாநகரை ஒட்டியுள்ள மீளவிட்டான் ஊராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது மாநகரத்துடன் இணைக்கப்பட்டது. அந்த ஊராட்சியின் தலைவராக கடந்த காலங்களில் சுதாகரின் தந்தை மற்றும் சகோதரர் பணியாற்றியுள்ளனர்.
தூத்துக்குடியின் பாரம்பரிய குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதால்,
சுதாகருக்கு தொகுதியில் தனி அறிமுகம் தேவையில்லை என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கூட்டுறவு வங்கியில் சாதனை நிர்வாகம்;
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த காலகட்டத்தில்,
சுதாகர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
விளாத்திகுளம் தொகுதி விவசாயிகளுக்கு ரூ.200 கோடிக்கு மேல் பயிர் காப்பீட்டு நிவாரணம்,
வட்டி இல்லா பயிர் கடன்,
வாரா கடன் வசூலில் சாதனை,
வங்கி மூலதனத்தை ரூ.900 கோடியில் இருந்து ரூ.1700 கோடி வரை உயர்த்துதல்,
மேலும் வங்கியின் வரலாற்றில் முதன்முறையாக ரூ.7.5 கோடிக்கு மேல் நிகர லாபம் ஈட்டியமை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
கட்சியில் வலுவான ஆதரவு;
தூத்துக்குடி மாநகரில் உள்ள 60 வார்டுகளில் 50-க்கும் மேற்பட்ட வட்டச் செயலாளர்கள்,
6 பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர்,
தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதனின் தீவிர ஆதரவாளர்கள் என்பதும் குறிப்பிடப்படுகிறது.
மாவட்ட செயலாளரின் நம்பிக்கைக்குரிய முக்கிய தலைவர்களில் ஒருவராக சுதாகர் இருப்பதால்,
அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால்,
அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தொண்டர்கள் முழு வீச்சில் களமிறங்கத் தயாராக உள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில்
மாவட்டச் செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கையின் பின்னணியில்,
தூத்துக்குடி தொகுதியில் மாற்றத்துக்கான முடிவை அதிமுக தலைமை எடுத்து வருவதாகவும்,
அந்த மாற்றத்தின் முகமாக சுதாகர் பெயர் முன்னிலையில் இருப்பதாகவும்
அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.