Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் அங்கே கீதா ஜீவன் ஜெகன் பெரியசாமி இங்கே குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் அதிமுக வெற்றி உறுதி: செல்லப்பாண்டியன் நம்பிக்கை

Admin 2 days ago தூத்துக்குடி
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி முற்றுப்புள்ளி வைக்கப்படும் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் தெருமுனை பிரச்சாரம்

தூத்துக்குடி, ஏப்.1 –
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சி.த. செல்லப்பாண்டியன் அவரை ஆதரித்து தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் 3ம் மைல், அண்ணா நகர் பகுதிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசுகையில் செல்லப்பாண்டியன், திமுகவில் பெரும்பாலும் குடும்ப ஆட்சியை நடைபெறுகிறது வாரிசு அரசியல் நடைபெறுகிறது அங்கே மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் கீதா ஜீவன் ஜெகன் பெரியசாமி என்ற குடும்ப ஆட்சியை நடைபெறுகிறது எனவும் திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டினார். மதுபான கடைகளில் கூடுதல் விலை வசூல் செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன என்றும், நகரில் பூங்காக்களின் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் கூறினார்.

தூத்துக்குடியில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இதை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மழை, வெள்ள காலங்களில் தாம் மக்களுடன் இருந்து உதவி செய்ததாகவும், அப்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து நிலைமையை ஆய்வு செய்ததாகவும் குறிப்பிட்டார்.

வரவிருக்கும் தேர்தலில் அதிமுக பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் சார்ந்த நிர்வாகிகள், உள்ளூர் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

கோவில் வளாகத்தில் தெருநாய்கள் தொல்லை: ரேபிஸ் நோய் பரவும் அபாயம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை

19 hours ago

வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு உறுதி செய்யும் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட திருத்தம்: அன்னபூர்ணா

1 day ago

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நலத்திட்டங்களை நினைவூட்டி எடப்பாடி ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து தெருமுனைப் பிரச்சாரம் செய்த - வேட்பாளர் சி த செல்லப்பாண்டியன்.

1 day ago

கருத்துக் கணிப்பில் முன்னிலை: தூத்துக்குடி தொகுதியில் சி.த. செல்லப்பாண்டியன் முன்னேற்றம்

2 days ago

கடன் வழங்க தாமதம் – வேளாண்மை பணிகள் பாதிப்பு: தூத்துக்குடி விவசாயிகள் கவலை

3 days ago

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பு இல்லை,இளைஞர் வேலைவாய்ப்பு இல்லை – திமுக மீது பழனிசாமி தாக்கு

3 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்