Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

கடன் வழங்க தாமதம் – வேளாண்மை பணிகள் பாதிப்பு: தூத்துக்குடி விவசாயிகள் கவலை

Admin 3 days ago தூத்துக்குடி
கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று கடன் கோரியும், பல்வேறு காரணங்களை கூறி தாமதப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டு.
தூத்துக்குடி, மார்ச் 31:

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிராமப்புறங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வழக்கமாக பயிர் பணிகளுக்காக கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தி மீண்டும் கடன் பெறுவது நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ஏற்கனவே பெற்ற கடன்களை முழுமையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகள், மீண்டும் வேளாண்மை பணிகளை தொடங்குவதற்காக கடந்த இரு மாதங்களாக கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று கடன் கோரியும், பல்வேறு காரணங்களை கூறி தாமதப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். இதனால் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தின் உமரிக்காடு ஊராட்சி பகுதியைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கடன் கிடைக்காத காரணத்தால் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு தேவையான கடன்களை விரைவாக வழங்க வேண்டும் என்றும், வேளாண்மை பணிகள் தடையின்றி நடைபெற உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

கோவில் வளாகத்தில் தெருநாய்கள் தொல்லை: ரேபிஸ் நோய் பரவும் அபாயம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை

19 hours ago

வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு உறுதி செய்யும் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட திருத்தம்: அன்னபூர்ணா

1 day ago

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நலத்திட்டங்களை நினைவூட்டி எடப்பாடி ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து தெருமுனைப் பிரச்சாரம் செய்த - வேட்பாளர் சி த செல்லப்பாண்டியன்.

1 day ago

மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் அங்கே கீதா ஜீவன் ஜெகன் பெரியசாமி இங்கே குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் அதிமுக வெற்றி உறுதி: செல்லப்பாண்டியன் நம்பிக்கை

2 days ago

கருத்துக் கணிப்பில் முன்னிலை: தூத்துக்குடி தொகுதியில் சி.த. செல்லப்பாண்டியன் முன்னேற்றம்

2 days ago

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பு இல்லை,இளைஞர் வேலைவாய்ப்பு இல்லை – திமுக மீது பழனிசாமி தாக்கு

3 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்