Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் பாஜக சார்பில் ‘சேவா ஜோதி’ பேரணி தேசியக்கொடி, பாஜக கொடிகளுடன் நிர்வாகிகள் பங்கேற்பு

Admin 13 hours ago தூத்துக்குடி
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை நினைவுகூர்வதுடன், மக்கள் நலன் மற்றும் சமூக சேவையின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துரைப்பதே பேரணியின் நோக்கம்

தூத்துக்குடி, அக்.7:


பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் ‘சேவா ஜோதி’ பேரணி தூத்துக்குடியில் நடைபெற்றது.

பாஜக இளைஞர் அணி மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், அவர் ‘சேவா ஜோதி’ தீபத்தை ஏந்தியபடி முன்னிலை வகித்தார். பேரணியில் பங்கேற்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேசியக்கொடி, பாஜக கொடிகளை ஏந்தியபடி சென்றனர்.1791361005_1005390698.jpg

பிரதமர் நரேந்திர மோடியின் பொதுவாழ்க்கைப் பயணம், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சமூக சேவைப் பணிகளை விளக்கும் பதாகைகளும் பேரணியில் இடம்பெற்றன. பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை நினைவுகூர்வதுடன், மக்கள் நலன் மற்றும் சமூக சேவையின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துரைப்பதே பேரணியின் நோக்கம் என பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

2047 இலக்கை வலியுறுத்தி...

இந்தியாவின் சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என்பதையும் பேரணியில் வலியுறுத்தினர். நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

பேரணியில் பாஜக தேசிய செயலாளர் மா. வெங்கடேசன், மீனவர் அணி மாநிலத் தலைவர் சீமா பாலு, தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏ.எம். ராஜேஷ், ஆறுமுகம், செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், இசக்கிமுத்து, காளிராஜா, மாசானம், சண்முகசுந்தரம், வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வீரா உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

போதையில்லா பாரதத்தை உருவாக்குவோம்! தூத்துக்குடியில் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் விழிப்புணர்வு பிரசாரம்

1 day ago

எல்ஜி பெருங்காயத்தூள் விற்பனைக்கு தடை நீக்கப்பட்டதா? தூத்துக்குடி மளிகைக் கடைகளில் மீண்டும் விற்பனை – உணவு பாதுகாப்புத்துறை விளக்கம் அளிக்குமா?

2 days ago

தூத்துக்குடி உப்பளங்களை பாதுகாக்க தொடர் போராட்டம் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணியிடம் உப்பு உற்பத்தியாளர்கள் மனு

2 days ago

தூத்துக்குடி மணல்மேடு பாத்திமா நகர் பரிசுத்த பாத்திமா அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

4 days ago

தாராபுரம் இடைத்தேர்தல் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை - பொதுக்கூட்டத் திடலுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள் வருகை

5 days ago

தூத்துக்குடியில் பெண்கள் சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

5 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்