தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோகத்திற்கான முக்கிய நீராதாரப் பகுதிகளான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழவல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (நவம்பர் 19, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக, நாளை 19/11/26 காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்வதுடன், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா,கேட்டுக்கொண்டுள்ளார்.