Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்! போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

Admin 8 hours ago தூத்துக்குடி
மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாகச் சென்று சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
தூத்துக்குடி, நவ.18:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெயராஜ் சாலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மாநகராட்சி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.

ஜெயராஜ் சாலை பகுதியில் சாலையோரங்களில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் சிரமமின்றிச் சென்று வருவதற்கும் இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.1794997883_1005547431.jpg

இதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாகச் சென்று சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சாலையை ஆக்கிரமித்திருந்த பொருட்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பகுதிகள் அகற்றப்பட்டு, சாலையைப் பொதுமக்கள் சிரமமின்றிப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சாலைகளில் போக்குவரத்து தடையின்றி நடைபெறவும், பாதசாரிகள் பாதுகாப்பாகச் சென்று வரவும், பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் இதுபோன்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்

காவிரி தொழில்நுட்பக் குழும துணைத் தலைவர் பதவி 5 மாதங்களாக காலி! தமிழக விவசாயிகளின் நீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய முக்கியப் பதவியை நிரப்பாதது ஏன்? – வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை கேள்வி!

7 hours ago

காயல்பட்டினம் கடற்கரையில் கொத்துக்கொத்தாக கரை ஒதுங்கிய பேச்சாளை மீன்கள்! கடற்கரையில் மீன்கள் குவிந்ததால் பொதுமக்கள் ஆச்சரியம் – மீனவர்கள் கவலை!

8 hours ago

தூத்துக்குடியில் கடைகள் முன்பு குப்பைகளை கொட்டியவர்களுக்கு அபராதம்! நான்கு வகையாகப் பிரித்து மாநகராட்சி வாகனத்தில் மட்டுமே வழங்க வேண்டும் – மாநகராட்சி எச்சரிக்கை!

8 hours ago

சி.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு தடுப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் குப்பை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு!

8 hours ago

“வைகோவுக்கு அரசியலில் நிலைத்தன்மை இருக்கிறதா? 420-க்கு உதாரணம் அவர்தான்!” – ஜி.வி. மார்க்கண்டேயன் கடும் தாக்கு!

10 hours ago

தூத்துக்குடி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது! பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்!

12 hours ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்