Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

“வைகோவுக்கு அரசியலில் நிலைத்தன்மை இருக்கிறதா? 420-க்கு உதாரணம் அவர்தான்!” – ஜி.வி. மார்க்கண்டேயன் கடும் தாக்கு!

Admin 10 hours ago தூத்துக்குடி
“விஜய்க்காக தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்வேன்” என்ற வைகோவுக்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ. பதிலடி!
தூத்துக்குடி, நவ.18:

“விஜய்க்காக தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்வேன்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், வைகோவின் கடந்தகால அரசியல் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார்.1794991432_1005547114.jpg

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

“மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அரசியலில் யாராவது ஒரு 420-ஐ பார்த்திருக்கிறீர்களா? அதற்கு உதாரணம் வைகோதான். அவரிடம் அரசியலில் ஏதாவது ஒரு நிலைத்தன்மை இருக்கிறதா?

குமரி முதல் கூடுவாஞ்சேரி வரை நடைபயணம் சென்று, ஜெயலலிதாவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று முழங்கியவர் வைகோ. ஆனால், அதே வைகோ கூடுவாஞ்சேரியில் ஜெயலலிதாவைச் சந்தித்து அரசியல் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெற்றார். இதுதான் அவரது அரசியல் நிலைப்பாடு.

ஒரு காலத்தில் கருணாநிதியும் நானும் பேனாவும் மூடியுமாக இருந்தோம் என்று வைகோ கூறியிருக்கிறார். அதாவது, பேனா வைகோ என்றால் அதன் மூடி கலைஞர் என்றும், பேனா திறந்திருந்தால் மை காய்ந்துவிடும் என்பதால் அதை மூடி பாதுகாத்தவர் கலைஞர் என்றும் பெருமையாகக் கூறியிருக்கிறார். அப்படியெல்லாம் கூறிய வைகோவுக்கு இன்று தனது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வது குறித்து வெட்கமாக இல்லையா?

குமரி முதல் கூடுவாஞ்சேரி வரை வைகோவும் அவரது மகன் துரை வைகோவும் வேலை வெட்டி இல்லாமல் இருக்கின்றனர். தேர்தலின்போது மீண்டும் மு.க.ஸ்டாலின்தான் ஆட்சி அமைப்பார் என்று கூறிய வைகோ, தேர்தலில் போட்டியிட்ட தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைக்கூட தக்கவைத்துக் கொள்ள முடியாதவர்.

அப்படிப்பட்ட வைகோ இப்போது விஜய்க்காக ஊர் ஊராகச் சென்று தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்யப் போகிறாரா? ஊர் இல்லாத ஊருக்கு நாட்டாமை செய்தாராம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. நீங்கள் நாட்டாமை செய்ததெல்லாம் இப்போது காலியாகிவிட்டது.

மக்கள் நலக் கூட்டணி என்று ஒன்றை உருவாக்கி, விஜயகாந்தை அரசியல் ரீதியாகத் தெருவில் இழுத்துவிட்டவர்தான் வைகோ. அந்தக் கூட்டணி மூலம் அனைவரையும் அரசியல் ரீதியாகப் பாதிப்புக்குள்ளாக்கியவர். இப்படி அரசியலில் ஒவ்வொருவரையும் கெடுத்துவந்த வைகோவைப் பற்றி என்ன சொல்வது?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

விஜய்க்காக தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்வேன் என்ற வைகோவின் அறிவிப்புக்கு, அவரது கடந்தகால அரசியல் கூட்டணிகள், நிலைப்பாடுகள் மற்றும் மக்கள் நலக் கூட்டணி விவகாரங்களை முன்வைத்து ஜி.வி. மார்க்கண்டேயன் அளித்துள்ள இந்தப் பதிலடி தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

காவிரி தொழில்நுட்பக் குழும துணைத் தலைவர் பதவி 5 மாதங்களாக காலி! தமிழக விவசாயிகளின் நீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய முக்கியப் பதவியை நிரப்பாதது ஏன்? – வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை கேள்வி!

7 hours ago

காயல்பட்டினம் கடற்கரையில் கொத்துக்கொத்தாக கரை ஒதுங்கிய பேச்சாளை மீன்கள்! கடற்கரையில் மீன்கள் குவிந்ததால் பொதுமக்கள் ஆச்சரியம் – மீனவர்கள் கவலை!

8 hours ago

தூத்துக்குடியில் கடைகள் முன்பு குப்பைகளை கொட்டியவர்களுக்கு அபராதம்! நான்கு வகையாகப் பிரித்து மாநகராட்சி வாகனத்தில் மட்டுமே வழங்க வேண்டும் – மாநகராட்சி எச்சரிக்கை!

8 hours ago

சி.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு தடுப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் குப்பை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு!

8 hours ago

தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்! போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

8 hours ago

தூத்துக்குடி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது! பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்!

12 hours ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்