Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு மத்திய மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Admin 7 hours ago தூத்துக்குடி
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஸ்டேட்பேங்க் காலனி 12-வது வார்டில் நடைபெற்றது.
தூத்துக்குடி, செப்.27:

 கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் திருவுருவப் படங்களுக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஸ்டேட் வங்கி காலனி 12-வது வார்டில் நடைபெற்றது.

தமிழக வெற்றி கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் C. ஜோசப் விஜய் ஆணைக்கிணங்கவும், தவெக பொதுச் செயலாளர் அமைச்சருமான ஆனந்த் வழிகாட்டுதலின்படியும், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் ஆலோசனைப்படி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மத்திய மாவட்ட இணைச் செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான M. கோல்டன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு, வடமேற்கு பகுதி செயலாளர் சதீஷ்குமார் ஏற்பாடு செய்திருந்தார். 12-வது வார்டு வட்டச் செயலாளர் சேர்மதுரை முன்னிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் திருவுருவப் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் முத்துபாலன், ராமச்சந்திரன், மாரிமுத்து, இசக்கிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள் ராஜா, இக்னேஷியஸ், 12-வது வார்டு இணைச் செயலாளர் சக்திகுமார், துணைச் செயலாளர்கள் மாரியம்மாள், சந்தியா, சீதாலட்சுமி, நான்சி மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்

தவெக ஆட்சியில் தொடர்ந்து முடிவுகள் வாபஸ்: நிர்வாகத்தில் என்ன நடக்கிறது? – அண்ணாமலை கேள்வி

9 hours ago

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு

1 day ago

சங்கரப்பேரியில் சிதிலமடைந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பு இடித்து அகற்றப்படுகிறது பல ஆண்டுகால கவுன்சிலர் ரெங்கசாமியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி பொதுமக்கள் மகிழ்ச்சி

1 day ago

தூத்துக்குடியில் டெங்கு தடுப்பு, தூய்மை பணி - ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு

1 day ago

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

2 days ago

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

2 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்