சமத்துவ மக்கள் கட்சியின் சமத்துவ பொங்கல் விழா!

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி தேவர் புறம் ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஐயப்பன் அவர்கள் கலந்து கொண்டு ஏழைப் பெண்ணுக்கு நலத்திட்ட உதவியாக இலவச தையல் இயந்திரம் வழங்கினார்கள் தூத்துக்குடி தொழிலதிபர் ரத்னா ஏஜென்சி அதிபர் திரு. தர்மராஜ் அவர்கள் அனைவருக்கும் பொங்கல் இனிப்பு வழங்கினார்கள் இவ்விழாவில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், மில்லை தேவராஜ் பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி, பழனிவேல் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் முருகன் மாநகரப் பொருளாளர் சந்தனராஜ் மாநகர தொழிலாளர் அணி செயலாளர் தொம்மை குரூஸ் வார்டு செயலாளர்கள் ஆத்தியப்பன், துரைச்சாமி, ஐசக், ராஜேஷ், பார்த்திபன், சந்தனகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் இவ்விழாவில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள் பொன்மணி, ஜேசுச்செல்வி, மகேஸ்வரி, ராதா லட்சுமி,பத்மா, பாக்கியலட்சுமி, ராணி மற்றும் நிர்வாகிகள் பொங்கலிட்டனர்