தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கம் மற்றும் நாயுடு மகாஜன டிரஸ்ட் சார்பில் 2023 ம் ஆண்டு யுகாதி விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கம் மற்றும் நாயுடு மகாஜன டிரஸ்ட் சார்பில் 2023 ம் ஆண்டு யுகாதி விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி அபிராமி மஹாலில் நாயுடு மகாஜன சங்கம் மற்றும் நாயுடு மகாஜன டிரஸ்ட் சார்பில் 2023 ம் ஆண்டு யுகாதி விழா  கூட்டம் 22/03/23 அன்று ஐஎன்டியுசி செயல் தலைவர் கதிர்வேல் மற்றும் நாயுடு மகாஜன சங்க தலைவர் ராமசாமி நாயுடு தலைமையிலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சென்ட் உறுப்பினர் விவேகம் ரமேஷ் முன்னிலையிலும் நடைபெற்றது. 

இந்த விழாவில் ,செயலாளர் டிரஸ்டி ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார் , சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நாயுடு சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளர் இல.சடகோபராமநுஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .

தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்க இணை செயலாளரும் தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஆர்.ரெங்கசாமி , பொருளாளர் வெங்கடேஷ் நாயுடு , உப தலைவர் சங்கரநாராயணன் நாயுடு ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

விழாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த 10 மற்றும் 12 வது வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மூன்று மாணவ மாணவிகளுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் டிரஸ்ட் உறுப்பினர்கள் செல்லசாமி நாயுடு ,கோவிந்தசாமி நாயுடு , மோகன் நாயுடு , வெங்கடசுப்பிரமணியன் நாயுடு , மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, ஆதிநாத ஆழ்வார், சுப்பிரமணியன், ரமேஷ், சங்கரநாராயணன், வழக்கறிஞர் நாகராஜன் பாபு, ராமையா, துளசி பத்மநாதன், முனியசாமி, லட்சுமி காந்த், சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .