தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை வெள்ளத்தில் உயிரிழந்த 22 நபர்களின் குடும்பத்தாரிடம் ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதியை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,எம்பி கனிமொழி கருணாநிதி முன்னிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையிலும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும் சிக்கி உயிரிழந்த 22 குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம், வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு தலா ரூ. பத்தாயிரம் நிதியுதவியும் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

 நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள் கீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன், ஆர். காந்தி மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன்,சண்முகையா, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.