தூத்துக்குடி மாநகராட்சியில் மகளிர் தின விழா; பெண் கவுன்சிலர்கள் மற்றும் பெண் பணியாளர்களுக்கு பரிசு வழங்கி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கௌரவிப்பு!.

தூத்துக்குடி மாநகராட்சியில் உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டது தூத்துக்குடி மாநகராட்சியில் பெண் கவுன்சிலர்கள் மற்றும் பெண் பணியாளர்களை கெளரவ படுத்ததும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சியில் 32 வார்டுகளில் பணியாற்றும் பெண் உறுப்பினர்களுக்கும் இதுபோல் மாநகராட்சி நான்கு மண்டலங்களில் பணியாற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கும் கௌரவம் செய்யும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி அனைவருக்கும் பரிசு பொருட்களை வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் மாநகராட்சி பணியாளர்களின் கும்மி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்த மகளிர் தின விழாவில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மாநகராட்சி துணை ஆணையர் குமார் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி நிர்மல்ராஜ் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெண் கவுன்சிலர்கள் கூட்டாக மேயர் ஜெகன் பெரியசாமி உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்