ஓட்டப்பிடாரம் பகுதியில் இரவோடு இரவாக மணல் கடத்தும் அராஜகத்தின் உச்சத்தில் காற்றாலை நிறுவனங்கள்.
ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் காற்றாலை நிறுவனங்கள் பல இயங்கி வருகிறது அந்த காற்றாலை நிறுவனங்கள் கனரக வாகனங்கள் மூலம் கொண்டுவரப்படும் காற்றாலை உபகரணங்களை பஞ்சாயத்து சாலைகளை உபயோகம் செய்யக்கூடாது என்று ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற 61 பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பில் சமாதான கூட்டம் 23/01/23 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காற்றாலை நிறுவனங்கள் பஞ்சாயத்து சாலைகளை உபயோகம் செய்யக்கூடாது என தீர்மானமாக கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தை காற்றாலை நிறுவனங்களும் ஏற்றுக்கொண்ட நிலையில் நேற்றைய தினம் ஓட்டப்பிடாரம் பகுதியில் போலியான அனுமதிச்சீட்டை வைத்துக்கொண்டு இரண்டு TN 69 BL 2964, TN 55 U 2998 ஆகிய டிராக்டர் மூலமாக மணல் கடத்தும் பணியை காற்றாலை நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு இரண்டு டிராக்டர்களையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் இந்த டிராக்டர் இரண்டையும் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நாங்கள் பிடித்துக் கொடுத்த இந்த இரண்டு டிராக்டர்களும் இரவோடு இரவாக காவல் நிலையத்தில் இருந்து மாயமாகியுள்ளது. காவல்துறையும் காற்றாலை நிறுவனங்களுடன் கைகோர்த்து உள்ளதா? நாங்கள் பிடித்துக் கொடுத்த அந்த இரண்டு வாகனங்களையும் எங்கே என்ற கேள்விக்கு எந்த ஒரு பதிலும் இல்லை. குற்றவாளிகளுக்கு காவல்துறை உறுதுணையாக செல்கிறதா? காவல்துறை மீது பலத்த சந்தேகமும் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு காற்றாலை நிறுவனங்களின் அராஜகப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.