பசுவந்தனை அரசு ஆஸ்பத்திரி முன்பு உயிர் பழி வாங்க காத்திருக்கும் ஆபத்தான மின்கம்மம் மாற்றம் செய்யுமா ? மின் வாரியம்.

பசுவந்தனை அரசு ஆஸ்பத்திரி முன்பு உயிர் பழி வாங்க காத்திருக்கும் ஆபத்தான மின்கம்மம் மாற்றம் செய்யுமா ? மின் வாரியம்.

கோவில்பட்டி மின்வாரிய கோட்டம் பசுவந்தனை மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பசுவதனை அரசு ஆஸ்பத்திரி முன்பு சேதமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது.

இந்த மின்கம்பத்தை மாற்றம் செய்ய வேண்டி பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்களால் புகார் தெரிவித்த பின்பும் இதுவரை மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.

 தினசரி இந்த அரசு ஆஸ்பத்திரியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாதம் தோறும் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். 

தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசுவதால் இந்த மின்கம்பம் பலமிழந்து ஆடிக் கொண்டிருக்கிறது இந்த ஆட்டத்தை கண்டு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

இதனால் மின்கம்பம் உடைந்து விழுந்து ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்று விடக்கூடாது உயிர் சேதம் ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்? பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.