முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் எங்கு சென்றாலும் அதிமுக தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிப்போம் எஸ்.பி. சண்முகநாதன் காட்டம்.
பொய் வழக்கு போட்ட திமுக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் எங்கு சென்றாலும் அதிமுக தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிப்போம் - தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் பேச்சு.
சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் மதுரை விமான நிலைய வந்த அவருக்கு வேண்டுமென்றே குண்டர்களை ஏவி விட்டு எடப்பாடி கே.பழனிச்சாமியை தர குறைவான வார்த்தைகளை பேசிய குண்டர் மீது வழக்குப் பதியாமல் தமிழக முன்னால் முதல்வர், அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி மீது பொய்வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி அம்மா பேரவை சார்பில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும்,
முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு பொய் வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் எஸ்.பி சண்முக நாதன் ;
இன்றைக்கு தமிழகத்தை சுடுகாடாக மாற்றியுள்ள திமுக அரசு முன்னாள் முதல்வர் மீது பொய் வழக்கு போட்டுள்ளது இதனை வண்மையாக கண்டிப்பதாகவும், இதனை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனவும் பொய் வழக்கு போட்ட திமுக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் எங்கு சென்றாலும் அதிமுக தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவிப்போம் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் திருப்பாற்கடல்,கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாமன்ற உறுப்பினர் வீரபாகு,மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் 51 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சி கொரடாவுமான மந்திர மூர்த்தி, மேற்கு பகுதி செயலாளர் முருகன்,கிழக்கு பகுதி செயலாளர் சேவியர், வழக்கறிஞர் யு எஸ் சேகர்,39 வது வார்டு வட்ட செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட சிறுபான்மையணி பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தனராஜ்,மத்திய வடக்கு பகுதி இளைஞரணி செயலாளர் டைகர் சிவா, மேற்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், 35 வது வட்டக்கழக செயலாளருமான மணிகண்டண், மகளிர் அணியினர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பெருவாரியாக கலந்து கொண்டனர்.