கனிமொழி கருணாநிதி எம்பி என்ன செய்தார்? தூத்துக்குடிக்கு? சுயேச்சை வேட்பாளர் சமூக ஆர்வலர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் அடுக்கடுக்கான கேள்வியை முன்வைத்து பிரச்சாரம்.

கனிமொழி கருணாநிதி எம்பி என்ன செய்தார்? தூத்துக்குடிக்கு?   சுயேச்சை வேட்பாளர் சமூக ஆர்வலர்  அருணா தேவி ரமேஷ் பாண்டியன் அடுக்கடுக்கான கேள்வியை முன்வைத்து பிரச்சாரம்.

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சமூக ஆர்வலர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி கருணாநிதி எம்பி தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தூத்துக்குடி தொகுதி வேட்பாளராகவும் களம் இறங்கியுள்ளார்.

அவர் பொது மக்களிடம் பேசுகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தூத்துக்குடி தொகுதிக்கு மக்களுக்கு என்ன செய்தார் கனிமொழி கருணாநிதி?என்ற கேள்வியை எழுப்பி அருணா தேவி ரமேஷ் பாண்டியன் 

ஊழல் செய்தும் விலைவாசியை உயர்த்தியும் கல்வித் தரத்தை குறைத்தும் கேஸ் விலையை உயர்த்தியும் மக்கள் அடிப்படை தேவைகளுக்கு கையேந்து சூழ்நிலையையும் ஏற்படுத்தியது தான் இவர்கள் ஐந்தாண்டு சாதனை.

திமுகவும் அதிமுகவும் தேர்தலில் போட்டி போட்டு செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த பணத்தில் ஏழை எளிய மக்களுக்கு வீடு வசதி சாலை வசதி இலவசமாக கல்வி செய்து கொடுத்திருக்கலாம் மகளிர்க்கு இலவசமாக பேருந்து இவரிடம் கேட்டார்களா? இவர்களிடம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை கேட்டார்களா? அதை கொடுத்துவிட்டு பெண்களைப் பார்த்து பவுடர் போட்டீர்களா லிப்ஸ்டிக் போட்டீர்களா சாந்து போட்டு வைத்தீர்களா ஆயிரம் ரூபாய் வந்துச்சா என கேள்வியையும் எழுப்பி பெண்களை அவமானப்படுத்தும் வகையில் திமுக கட்சியைச் சார்ந்தவர்கள் பேசி வருகிறார்கள் மக்கள் வரி பணத்தை கொள்ளை அடித்து வைத்துக்கொண்டு நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றனர் திமுகவில் வாரிசு அரசியல் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அப்பா மகன் தங்கச்சி பேரன் என வரிசையாக அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களே எம் பி எம் எல் ஏ பதவியில் இருக்கின்றனர் ஏன் ஒரு சாதாரண குடிமக்களுக்கு வழங்க வேண்டியது தானே இதையெல்லாம் செய்த திமுக அரசு மீண்டும் கனிமொழி கருணாநிதிக்கு தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது தூத்துக்குடிக்கு ஒன்றுமே செய்யாத அவர் இப்போது தனக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார் எனவே வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து மக்கள் பணி செய்திட கரும்பு விவசாயிகள் சின்னத்தில் வாக்குகளை தந்து அருணா தேவி ரமேஷ் பாண்டியன் ஆகிய என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.