மாதம் ரூ 3000 ஓய்வூதியம் பெற என்னென்ன தகுதிகள் வேண்டும் விவசாயிகளுக்கு ....

மாதம் ரூ 3000 ஓய்வூதியம் பெற என்னென்ன தகுதிகள் வேண்டும் விவசாயிகளுக்கு ....

விவசாயிகளின் நலன் கருதி அவர்களின் முதிர்வு காலத்தில் மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் குறித்தான விவரங்களை இப்பதிவின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

விவசாயிகள் ஓய்வூதியம்:

மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களுக்குமான நலன்களை வழங்கும் வகையிலான பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளின் நலன் கருதி பிஎம் கிசான் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதே போல கிசான் கிரெடிட் கார்டுகள் மற்றும் கிசான் மந்தன் யோஜனா போன்ற திட்டங்களும் செயல்பட்டு வருகிறது. கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் வாயிலாக விவசாயிகளின் முதிர்வு காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தில் தகுதி பெறுவதற்கு 60 வயது பூர்த்தியான விவசாயிகள் தகுதியானவர்கள் ஆவார்கள்.

18 முதல் 40 வயது வரையுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து தங்களின் 60 வயது வரை ஓய்வூதியத்திற்கான ப்ரீமியம் தொகையை செலுத்த வேண்டும். அதன் பிறகு 60 வயது முதல் விவசாயிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 3000 ஓய்வூதியமாக வழங்கப்படும். பிரீமியம் தொகையானது திட்டத்தில் சேரும் போது விவசாயிகளின் வயதை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயி எதிர்பாராத விதமாக இறந்து விட்டால் அவரின் மனைவி இத்திட்டத்தை தொடரலாம். 60 வயதுக்கு மேல் விவசாயி இறக்கும் பட்சத்தில் அவரது மனைவிக்கு பாதி ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.